• Fri. Nov 27th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

மதுரை கிழக்கு வட்டாரத்தில் தூய்மைப் பணி மற்றும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு..,

ByKalamegam Viswanathan

Nov 27, 2026

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., அவர்களின் அறிவுரையின்படியும், மாவட்ட சுகாதார அலுவலர் மரு. எம். பொற்செல்வன் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மதுரை கிழக்கு வட்டாரத்திற்குட்பட்ட ஒத்தக்கடை ஊராட்சியில் தீவிரத் தூய்மைப் பணி (Mass Cleaning) மற்றும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இப்பணியின்போது, டெங்கு கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் வகையில் பயன்பாடற்ற பழைய டயர்களை அகற்றுதல், கொசுப்புழு ஒழிப்புப் பணிகள், குடிநீர்த் தொட்டிகளில் குளோரினேஷன் செய்தல், குடியிருப்புப் பகுதிகளில் கொசு நச்சுப் புகை (Fogging) அடித்தல் மற்றும் தீவிரக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், மாவட்ட சுகாதார அலுவலர் மரு. எம். பொற்செல்வன் அவர்கள் நேரில் சென்று தூய்மைப் பணிகள் மற்றும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். அப்போது, நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் சுகாதார ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது.

இப்பணியில் மதுரை கிழக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.), வட்டார மருத்துவ அலுவலர், மருத்துவ அலுவலர்கள், மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர், ஒத்தக்கடை ஊராட்சி செயலர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டனர். மேலும், ஊராட்சித் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் டெங்கு கொசுப்புழு ஒழிப்புப் பணியாளர்கள் பெருமளவில் பங்கேற்று, ஊராட்சிப் பகுதிகள் முழுவதும் தீவிரத் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர்.

பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பராமரித்து, தேவையற்ற பொருட்களை அகற்றி, கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதில் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தினர்.