மதுரை மாவட்டம் பரவை வேலவெளிவீதி 4 வது குறுக்குதெரு பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் சந்தோஷ் வயது 24 டிரைவராக வேலை பார்த்து வந்த நிலையில் மர்ம நபர்களால் நேற்று முன்தினம் மாலை வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இவருக்கு தாரணி என்ற மனைவி மற்றும் ஒரு மகன் உள்ள நிலையில் இவரது மாமனார் செந்தில்குமார் மற்றும் அவரது சகோதரர்களான கணேஷ்குமார் சிவகுமார் ஆகியோருக்கிடையே இருந்து வந்த சொத்து தகராறு காரணமாக சந்தோஷ் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

மேலும் உயிரிழந்த சந்தோஷின் உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் கொலை நடந்த இடத்தில் மதுரை மாவட்ட எஸ்பி தேவநாதன் நேரில் ஆய்வு செய்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் கொலை வழக்கு சம்பந்தமாக மதுரை குலமங்கலத்தைச் சேர்ந்த அருண்குமார் வயது 30 பரவை பகுதியை சேர்ந்த மதன்குமார் வயது 22 அதே பரவை பகுதியை சேர்ந்த கணேஷ் குமார் வயது 47 உள்பட ஏழு பேரை கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கொலை சம்பந்தமாக வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



