• Mon. Nov 23rd, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

முக்கனி மனித நேய அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் – அமைச்சர் சம்பத்குமார் பங்கேற்பு!

BySeenu

Nov 23, 2026

முக்கனி மனித நேய அறக்கட்டளை சார்பில் பல்வேறு தரப்பினருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

தொடர்ந்து 14 வது ஆண்டாக நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு முக்கனி மனிதநேய அறக்கட்டளையின் தலைவர் இஸ்மாயில் தலைமை தாங்கினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் சம்பத்குமார் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த விழாவில் கண்பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகள், பள்ளி மாணவ, மாணவிகள், கணவனை இழந்த பெண்கள், விதவைகள், ஏழை, எளிய குடும்பத்தினர் மற்றும் மருத்துவ உதவி தேவைப்படுவோர் என பல்வேறு தரப்பினரைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோருக்கு லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில் மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்காக மூன்று சக்கர சைக்கிள்கள், சக்கர நாற்காலிகள், கண்பார்வையற்றோருக்கு ஊன்றுகோல்கள், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தையல் இயந்திரங்கள், ஏழை குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.

மேலும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, நோயாளிகளுக்கு மருத்துவ உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் மற்றும் கண்பார்வையற்றோரின் தேவைகளை அறிந்து அவர்களுக்குப் பயன்படும் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன், கணவனை இழந்த பெண்கள் மற்றும் விதவைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டன.

சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் என அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவிக்கரம் நீட்டும் வகையில் இந்த விழா அமைந்தது.

விழாவில் அறக்கட்டளை நிர்வாகிகள், செயலாளர் குமார் பொருளாளர் முகமது யூசுப் துணை செயலாளர் நிவேதா நிர்வாக உறுப்பினர்கள் ராஜ்குமார் காஜா ஷரீப் தனபால் அனஸ் கௌரி சபீனா ஹென்னா மற்றும் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.