• Sat. Nov 21st, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூரில் 10வது தர மாநாடு…

BySeenu

Nov 21, 2026

கோயம்புத்தூரில் 10வது தர மாநாட்டில், உற்பத்தித் தரத்தை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

கோயம்புத்தூர் உற்பத்தித்திறன் மன்றம் (CPC) மற்றும் இந்தியத் தர நிர்ணய அமைப்பின் (BIS) கோயம்புத்தூர் கிளை இணைந்து நடத்திய 10வது தர மாநாடு, கோவையில் உள்ள ஹோட்டல் ஜென்னிஸ் ரெசிடென்சியில் நடைபெற்றது.

“அடுத்த கட்டம் தரம்: செயல்திறன், நுண்ணறிவு மற்றும் மக்களுக்கு ஆற்றலளித்தல்” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில், அக்வாடெக் சானிட்டரி ஃபிட்டிங்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என். அசோக் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மாநாட்டிற்கு CPC துணைத் தலைவர் ஏ. சீனிவாசன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய CPC தலைவர் டாக்டர் கே. சித்ரா, உற்பத்திச் செயல்முறைகளில் ஏற்படும் குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறிதல், தரவுகளின் அடிப்படையில் குறைபாடுகளைத் தடுப்பது மற்றும் தொழில்துறை அனுபவங்களைப் பயிற்சியில் இணைப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற அமர்வுகளில், TTK Prestige நிறுவனத்தைச் சேர்ந்த பாலாஜி கே., Roots Multiclean நிறுவனத்தைச் சேர்ந்த டி. திருமுருகன், GK Industries நிறுவனத்தைச் சேர்ந்த ஏ. கணேஷ்குமார், Exotic Fruits நிறுவனத்தைச் சேர்ந்த சி. காசி உள்ளிட்ட தொழில்துறை வல்லுநர்கள் உரையாற்றினர். மேலும், BIS அமைப்பின் விஞ்ஞானி மற்றும் இயக்குநர் ஏ. அறிவழகனும் சிறப்புரையாற்றினார்.

குறைபாடற்ற உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் முன்கூட்டியே தரத்தை கணித்தல், BIS தரநிலைகள் மற்றும் சான்றிதழ் நடைமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. ஐந்து நிறுவனங்களைச் சேர்ந்த தரக் குழுவினர் தங்களது செயல்முறை ஆய்வுகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
மேலும், CPC முன்னாள் தலைவர் டாக்டர் கவிதாசன் நெறிப்படுத்திய தமிழ்க் கலந்துரையாடலில், தர மேம்பாட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் மனிதர்களின் முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றின் பங்களிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் தொழில்துறை வல்லுநர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் உள்ளிட்ட 130-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தர மேம்பாடு மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.நிகழ்ச்சியின் நிறைவாக CPC கௌரவ இணைச் செயலாளர் டி. ஜீவானந்தம் நன்றியுரை வழங்கினார்.