விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சிப்பிப்பாறை, ஏழாயிரம் பண்ணை, சங்கரபாண்டியபுரம் ,சுற்றுவட்டார பகுதியில் ஆறாயிரம் ஏக்கர் பரப்பளவில் மானாவாரி பயிரான மக்காச்சோளம் பயிரிடப்பட்டு உள்ளது.

மான்கள் காட்டு பன்றிகள் உட்பட வனவிலங்குகள் தொந்தரவு காரணமாக மக்காச்சோளம் கதிர் வருவதற்கு முன்பாக காட்டு பன்றிகளால் தோட்டம் முழுமையாக சேதப்படுத்தப்பட்டது.
பயிர்கள் முழுமையாக அழிக்கப்பட்டதால் இப்பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு பல லட்சம் நஷ்டம் அடைந்துள்ளனர்.
ஆகையால் இதற்கான உரிய இழப்பீட்டு தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.