விருதுநகரை சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 22) சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் கடந்த மாதம் 20ஆம் தேதி விருதுநகரில் தனது வீட்டில் இருந்து நண்பரை பார்க்க டூவீலரில் சென்றபோது எதிரே வந்த வாகனம் மோதியத்தில் ஏற்பட்ட விபத்தில் ஜெயசீலனின் இடது கட்டைவிரல் உள்ளிட்ட நான்கு விரல்கள் துண்டிக்கப்பட்டன .

அதனைத் தொடர்ந்து உறவினர்கள் உதவியுடன் துண்டிக்கப்பட்ட விரல்கள் சேகரிக்கப்பட்டு மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அதனைத் தொடர்ந்து வேலம்மாள் மருத்துவமனை டாக்டர்கள் அவசர சிகிச்சை பிரிவில் தொடர் அறுவை சிகிச்சை மூலம் ஜெயசீலன் துண்டிக்கப்பட்ட கட்டை விரல் நடு விரல் மோதிர விரல் மற்றும் சுண்டு விரல்கள் 17 மணிநேர கடும் போராட்டத்திற்கு பின் நரம்பியல் நிபுணர்கள் தோல் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை நிபுணர்கள் உள்ளிட்ட குழுவினர்கள் ஜெயசீலனின் துண்டிக்கப்பட்ட நான்கு விரல்களையும் அறுவை சிகிச்சை முறையில் மீண்டும் பொருத்தினர்.
அதனைத் தொடர்ந்து ஜெயசீலன் கடந்த 25 நாள் சிகிச்சை பின் தற்போது கைகளில் பொருத்தப்பட்ட விரல்களுக்கு தொடர்ந்து பிசியோதெரபிஸ்ட் சிகிச்சை மூலம் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது.
தென் தமிழகத்திலேயே முதன்முறையாக வேலம்மாள் மருத்துவமனையில் மருத்துவ குழுவினர் துண்டிக்கப்பட்ட நான்கு விரல்களும் 17 மணி நேர அறுவை சிகிட்சையின் மூலம் புதிய மருத்துவ சாதனை படைத்தனர்.
டாக்டர் சுசித்ரா வேலம்மாள் மருத்துவமனை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் கடந்த மாதம் 20ஆம் தேதி விருதுநகரில் நடைபெற்ற இருசக்கர வாகனங்கள் மோதியதில் ஜெயசீலன் என்பவரின் கைவிரல்கள் துண்டிக்கப்பட்டன அதனைத் தொடர்ந்து அவரது சேகரித்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் 2:00 மணி நேரத்திற்குள்ளாக அனுமதிக்கப்பட்டார் அங்கு அவர் பரிசோதிக்கப்பட்டு புதிய நவீன தொழில்நுட்பமான மைக்ரோஸ்கோப் அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு துண்டிக்கப்பட்டவர்களின் நரம்புகள் ரத்தக் குழாய்கள் ஆய்வு செய்யப்பட்டு அதன் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது சிகிச்சைக்கு பின் தற்பொழுது நலமுடன் உள்ளார்
டாக்டர் கார்த்திக் வேலம்மாள் மருத்துவமனை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் கூறுகையில்,
விபத்தில் காயம் அடைந்த ஜெயசீலன் என்பவர் ரெண்டு மணி நேரத்திற்குள்ளாக வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அதனுடைய விரல்கள் நன்றாக கழுவப்பட்டு பல்கலை சேகரிக்கப்பட்ட ஐஸ்கட்டி மூலம் பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டது இவ்வாறு கொண்டு வரப்படுவதனால் உறுப்புகள் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை வசதியாக இருக்கும்

ஆறு மணி நேரத்திற்குள்ளாக கொண்டு வந்ததால் அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் உறுப்புகள் பாதுகாப்பாக மீண்டும் அறுவை சிகிச்சை மூலம் இணைக்கப்படுகிறது மைக்ரோஸ்கோப் அறுவை சிகிச்சை மூலம் அறுவை சிகிச்சை செய்ததினால் நோயாளி தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் அறுவை சிகிச்சைக்கு பின் அவரது விரல்கள் செயல்படுகிறதா என்ற கண்காணிக்கப்பட்டு அதற்கான நுண்ணுயூட்டம் மருந்துகள் அளிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
அவ்வாறு கண்காணிப்பதன் மூலம் அறுவை சிகிச்சைக்கு பின் விரல்கள் சேதமோ அல்லது அழிய நிலைக்கோ செல்லாமல் பாதுகாப்பாக வீசி அளிக்க முடியும் நோயாளிக்கு தேவையான நீர்ச்சத்து மற்றும் நுண்ணுயிர் சத்துக்கள் அளிக்கப்பட்டு அவர் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து தற்போது பூரண நலம் பெற்றுள்ளார். இந்த அறுவை சிகிச்சை மூலம் சென்னை கோவை எடுத்து மதுரையில் ஒரே நேரத்தில் நான்கு விரல்களும் 17 மணி நேரம் அறுவை சிகிச்சை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது என டாக்டர் கார்த்தி கூறினார்.