தேனி மாவட்டம் சின்னமனூர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஐய்யா சேவா மணிமண்டபத்தில், புனிதமான கார்த்திகை மாதத்தின் முதல் நாளான (செவ்வாய்க்கிழமையன்று) ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மற்றும் முருக பக்தர்கள் துளசி மாலை சந்தன மாலை மற்றும் உருத்திராட்ச மாலை அணிந்து தங்களது புனித விரதத்தைத் தொடங்கினர்.

மண்டல பூஜை மற்றும் தைப்பூச விரதத்தை முன்னிட்டு அதிகாலையிலிருந்தே மணிமண்டபத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சபரிமலை மற்றும் பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு குருசாமி.லோகேந்திரராஜன் அவர்கள் தலைமை தாங்கி, முறைப்படி மாலை அணிவித்து விரத விதிமுறைகளை எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் மண்டபத்தில் கூடியிருந்த பக்தர்கள் “சுவாமியே சரணம் ஐயப்பா”, “அரோகரா” என்ற பக்திப் பரவச முழக்கங்களுடன் தங்களது விரதத்தைத் தொடங்கினர்.தொடர்ந்து சிறப்பு தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.