• Wed. Nov 18th, 2026

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக ஐரோப்பிய தென்னிந்திய இணைப்பு நிகழ்வு ..,

ByKalamegam Viswanathan

Nov 18, 2026

மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ‘GReaT Conversations – The Divine Darshan Edition’ என்ற சிறப்பு நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.

டிஜிட்டல் யுகத்தில் பாரம்பரியத்தை பாதுகாத்தல்” என்ற தலைப்பின் கீழ் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் முக்கிய அடையாளமான பாரம்பரிய ‘பிளம் கேக்’ தயாரிப்பதற்கான முதற்கட்டப் பணியே இந்த கேக் கலவை திருவிழா ஆகும்

. இதில் முந்திரி, பாதாம், பிஸ்தா, அக்ரூட், கறுப்பு மற்றும் வெள்ளை உலர் திராட்சை, செர்ரி பழங்கள்,மற்றும் பேரிச்சம்பழம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட உயர் ரக உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் கலவைகளில் மதுபானங்களை ஊற்றி பதப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது .

இதில் இங்கிலாந்து பிரான்ஸ் ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் போன்ற ஐரோப்பிய
வெளி நாட்டு பயணிகள்கேக் பதப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு தங்கள் மகிழ்ச்சியை உற்சாகத்துடன் கலந்து கொண்டு நடனமாடினர்.