• Mon. Nov 16th, 2026

AI தொழில்நுட்பத்துடன் கூடிய உலகின் முதல் மொபைல் செயலி அறிமுகம்.

BySeenu

Nov 16, 2026

உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் சுகாதார சவால்களில் ஒன்றான சர்க்கரை நோய் தடுப்பு மற்றும் பரிசோதனைக்காக, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய உலகின் முதல் மொபைல் செயலியை AGS Healthcare நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கோவையில் நடைபெற்ற உலக சர்க்கரை நோய் தின சிறப்பு நிகழ்வில், இந்நிறுவனத்தின் நிறுவனர், இயக்குநர் மற்றும் தலைமை மருத்துவர் டாக்டர் ஆதித்யன் குகன் இந்த செயலியை அறிமுகப்படுத்தி அதன் சிறப்பம்சங்கள் குறித்து விவரித்தார்.

மொபைல் எண் மூலம் பதிவிறக்கம் செய்து, வயது மற்றும் இணை நோய்களின் அடிப்படையில் பொருத்தமான முழு உடல் பரிசோதனை தொகுப்புகளை (Master Health Check-up) முன்பதிவு செய்யலாம்.
‘

இதன் மூலம் வெளிநாடுகளில் வசிக்கும் உற்றார் உறவினர்கள், இந்தியாவில் உள்ள தங்களுக்குப் பிடித்தமானவர்களின் பிறந்தநாள் மற்றும் சிறப்பு நாட்களில் முழு உடல் பரிசோதனை தொகுப்பை பரிசாக வழங்க முடியும். பயனர்கள் விரும்பும் வகையில், AGS Healthcare பிரதிநிதியை நேரடியாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனிப்பட்ட முறையில் ஆலோசனை பெற்று, தேவைக்கேற்ப பரிசோதனைத் தொகுப்பை வடிவமைத்துக் கொள்ளலாம்.

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான Chatbot மூலம் ஆய்வகப் பரிசோதனைகள் மற்றும் இமேஜிங் சேவைகள் குறித்த தெளிவான தகவல்களைப் பெறலாம். மேலும், மருத்துவ ஆலோசனை, எக்ஸ்-ரே, ஸ்கேன், ECG உள்ளிட்ட சேவைகளை எளிதாக முன்பதிவு செய்ய பிரத்யேக Marketplace வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது.தீவிர மருத்துவ அவசரநிலைகளின் போது, பயனர்கள் SOS பொத்தானை அழுத்துவதன் மூலம் உடனடியாக ஆம்புலன்ஸ் சேவையைப் பெற முடியும்.

சர்க்கரை நோய் மற்றும் முழு உடல் பரிசோதனையின் அவசியம் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ள பிரத்யேக விழிப்புணர்வு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.கோவையில் உள்ள சாய்बाबा காலனி, ஸ்ரீ நாராயண குரு சாலையில் அமைந்துள்ள AGS Healthcare வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், செயலியின் வடிவமைப்பு மற்றும் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய செயலி உருவாக்குநர் திரு. லோகியம் கலந்துகொண்டு நன்றியுரை வழங்கினார். இந்தச் செயலி ஆண்ட்ராய்டு (Android) மற்றும் iOS தளங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.