14.11.2026 அன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் நினைவு நாளை முன்னிட்டு வ.உ.சி ஒருங்கிணைப்பு குழு-கன்னியாகுமரி சார்பாக மாநில அளவிலான பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது.

இப்போட்டியில் மதுரை மாவட்டம் மேலூர் பாரதிதாசன் அகாடமி மாணவி பூவிகா 6-8 பிரிவில் முதல் பரிசு ரூபாய் 10,000 தொகையும்,சான்றிதழையும் பெற்றார்.
மாணவி துர்கா 11-12 பிரிவில் முதல் பரிசு ரூபாய் 10,000 தொகையும்,சான்றிதழையும் பெற்றார்.

பாரதிதாசன் அகாடமி செயலாளர் பாவலர் சி.சூர்யா மாணவியர்களுக்கு பயிற்சி கொடுத்து வழி நடத்தினார். பாரதிதாசன் அகாடமி தாளாளர் சி.ஜீவா மாணவியர்களுக்கு வாழ்த்துகளையும்,பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
