விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெம்பக்கோட்டை ஒன்றியம் அச்சங்குளம் கிராமத்தில் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் அமைக்கவும், கண்டியாபுரத்தில் பகுதி நேர நியாயவிலை கடை கட்டிடம் ரூபாய் 9 லட்சத்து ஐம்பதாயிரம் மதிப்பிலும், எலுமிச்சங்காய்பட்டி கிராமத்தில் 10 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம், ஏழாயிரம் பண்ணை ஆர்.சி. தெருவில் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம், இந்திரா நகரில் எட்டு லட்சம் மதிப்பீட்டில் நிழற்குடை, ராமுதேவன்பட்டியில் ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் நிழற்குடை, சிப்பி பாறையில் எட்டு லட்சம் மதிப்பீட்டில் நிழற்குடை, மேல கோதை நாச்சியார் புரத்தில் எட்டு லட்சம் மதிப்பிலான நிழற்குடை, ஆத்தூர் சுப்பிரமணியபுரம் கிராமத்தில் புதிய குளியல் தொட்டி, போர்வெல் வசதியுடன் அமைக்க ரூபாய் 6 லட்சத்து ஐம்பதாயிரம் மதிப்பிலான கட்டிடங்கள் அமைக்க பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒப்பந்தக் காரர்களிடம் கட்டிடம் நீண்ட காலம் பயன்படுத்தும் வகையில் தரமாக கட்ட வேண்டும் என எம்எல்ஏ கடற்கரைராஜ் கேட்டுக் கொண்டார்

நிகழ்ச்சிக்கு சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கடற்கரை ராஜ் தலைமை வகித்தார்.
ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணகுமார், ஜெயபாண்டியன், மாவட்ட வர்த்தகர் அணி துணைத் தலைவர் தங்கவேலு, ஒன்றிய பொருளாளர் விவேகானந்தன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.