ஐரோப்பிய நாடுகளில் கொண்டாடப்படும் கிறிஸ்மஸ் திருவிழாவின் வசந்த விழா முன்னோட்டமாக அறுவடை திருநாள் கொண்டாடப்படுவது வழக்கம் அதனைத் தொடர்ந்து உலர் திராட்சை பழங்கள் பப்பையா , பாதாம் பிஸ்தா முந்திரி பருப்புகளுடன் பழரசங்கள் இணைந்து கிறிஸ்மஸ் கேக் தயாரிப்பதற்காக முன்னோட்ட நிகழ்வு நடைபெற்றது.

இதன் மூலம் உலர் பழ கலவைகள் முந்திரி பாதாம் பிஸ்தா பருப்பு வகைகளுடன் (மதுபானங்கள்) பழரசங்கள் கலந்து 45நாட்கள் பதப்படுத்தப்பட்டு பின்னர் கிறிஸ்மஸ் கொண்டாட்ட நிகழ்விற்கு 150kg எடையுள்ள கேக் தயாரிக்கப்படும்.
இதில் ஒரு அங்கமாக இந்தாண்டு குழந்தைகள் தினம் நவம்பர் 14 கொண்டாடப்படுவதை ஒட்டி கிறிஸ்மஸ் கேக் மிக்ஸ் செரிமினியில் கலந்து கொள்ள வந்த சிறுவர் சிறுமிகளுடன் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது வண்ண மின்னொலியில்சேக்ஸ் போன் இசைகளுடன் குழந்தைகளுக்கு பிடித்தமான பாடல்கள் கிறிஸ்மஸ் பாடலுடன் கேக் தயாரிக்கும் நிகழ்ச்சி துவங்கியது.

மேலும் 2027 ஆம் ஆண்டு புது வருடத்தை உலகாலமாக வரவேற்க அமிகாவின் விடுதியில் தங்கியுள்ளவிருந்தினர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு வண்ண பலூன்களை வானில் பறக்க விட்டு வஇனிய கிறிஸ்மஸ் விழா வருக வசந்தத்துடன் வரும் புது வருடமே வருக அனைத்து மக்களுக்கும் வாழ்வும் நலமும் சந்தோஷமாக இருக்க வெற்றியுடன் துவங்கிட கிறிஸ்மஸ் கேக் தயாரிக்கும் விழா நடைபெற்றது.

திரைப்பட நடிகர் மகேந்திரன் கூறுகையில் மதுரைக்கு நீண்ட நாள் கழித்து வந்துள்ளேன் இங்கு குழந்தைகளின் தின விழா மற்றும் கேக் செரிமேனியல்
விழாவில் கலந்து கொள்ள வந்தேன்குழந்தைகளுடன் பங்கு கொண்டதில் நானும் ஒரு குழந்தையாக மாறியது மகிழ்ச்சியளிக்கிறதுகுழந்தைகளுடன் இணைந்து பலூன் பறக்க விட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது
கிறிஸ்மஸ் எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி அன்பு சமத்துவம் சகோதரத்துவம் இணைந்து செயல்படும் விழா என்பதால் நான் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்

நடிகை மகாலட்சுமி கூறுவையில்
மதுரையில் நடைபெறும் குழந்தைகள் தின விழா மற்றும் கேக் திருவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு மிகவும் மகிழ்ச்சி இங்குகுழந்தைகள் தின விழாவில் அவருடன் கலந்து கொண்டு பலூன் பறக்க விட்டது மற்றும் கேக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்