தேனி மாவட்டத்தில் 2027-ஆம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்கத் திருத்தத்தின் கீழ் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி வெளியிட்டார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 2027 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் தேனி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி, தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் மொத்தம் 10 லட்சத்து 46 ஆயிரத்து 972 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதில் ஆண் வாக்காளர்கள் 5 லட்சத்து 8 ஆயிரத்து 278 பேரும், பெண் வாக்காளர்கள் 5 லட்சத்து 38 ஆயிரத்து 518 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 176 பேரும் உள்ளனர்.
தொகுதி வாரியாக ஆண்டிபட்டியில் 2,58,136 பேரும், பெரியகுளத்தில் 2,66,954 பேரும், போடிநாயக்கனூரில் 2,64,453 பேரும், கம்பத்தில் 2,57,429 பேரும் வாக்காளர்களாக உள்ளனர்.
மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள நவம்பர் 12 முதல் டிசம்பர் 11 வரை விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன.
இதற்காக நவம்பர் 21, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சிறப்பு வாக்காளர் பதிவு முகாம்கள் நடைபெற உள்ளன.

எனவே, பொதுமக்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
தேனி மாவட்ட ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.