மதுரையில் தியாகராசர் நன்முறை மேல்நிலைபள்ளியில் 7ம் வகுப்பு பயின்று வரும் மாணவர் இயற்கை ஆர்வலர் சுதர்ஸன் சில தினங்களாக மரங்களில் அடிக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள் ஆணிகள் மற்றும் இரும்பு வாசர்களை அகற்றி வந்தார்.

அவைகளை பழைய இரும்பிற்கு விற்பனை செய்ததன் மூலம் அவருக்கு ரூபாய் 80 கிடைத்தது அத்தகையில் புங்கை மரக்கன்று ஒன்றினை வாங்கி (தமுக்கம் மைதானம்) மதுரை மாநகராட்சி மாநாட்டு மையத்தில் இன்று (09-11-2026) சுதர்ஸன் நடவு செய்தார்கள்.
