• Sun. Nov 8th, 2026

மதுரைக்கு வந்த நடிகர் சிவகார்த்திகேயன்

ByKalamegam Viswanathan

Nov 8, 2026

மதுரை எப்பவுமே ஸ்பெஷல். சின்ன வயதில் இருந்து மதுரைக்கு வருவது தான்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் சாமி தரிசனம் செய்தார். மதுரை மீனாட்சி அம்மன் சன்னதி மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதியில் தரிசனம் செய்த பின்பாக, மொட்டை கோபுர முனீஸ்வரரை சாமி தரிசனம் செய்து, பின்னர் கோவில் யானைக்கு பழங்கள் வழங்கி ஆசி பெற்றார்.

சாமி தரிசனம் முடித்துவிட்டு, கோவிலில் இருந்து வெளியில் வந்த நடிகர் சிவகார்த்திகேயனிடம் ரசிகர்கள் கை கொடுத்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதனையடுத்து அனைத்து ரசிகர்களுக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் கை கொடுத்து தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்..,

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சேயோன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சேயோன் ஷூட்டிங்கிற்காக மதுரை வந்திருக்கிறேன்.்மாமனார், மாமியார் வீட்டிற்கு வந்தேன், மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தோம். நேற்று பிள்ளையார்பட்டியில் சாமி தரிசனம் செய்தோம். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

சேயோன் 70 சதவீதம் படப்பிடிப்பு முடிந்து விட்டது. டிசம்பர் வரை இங்கு நிறைய ஊர்களில் படப்பிடிப்பு எடுக்கிறோம்.

எனது மனைவி ஆர்த்தி மதுரை என்பதால், மதுரையினுடைய மாப்பிள்ளை என்பது கூடுதல் பெருமை சந்தோசம் அனைவருக்கும் நன்றி என்றார்.