• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மோசடி மன்னனுடன் தொடர்பா மலையாள நடிகை விளக்கம்

பிரபல மலையாள நடிகை ஸ்ருதி லட்சுமி. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார். தமிழில் பாரசீக மன்னன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். தற்போது சின்னத்திரையில் மலையாள சீரியல்களில் நடித்து வருகிறார்.


கேரளாவில் போலி பழங்கால பொருட்களை விற்பனை செய்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக மான்சன் மாவுங்கல் என்பவர் கைது செய்யப்பட்டார். இவருக்கும், ஸ்ருதி லட்சுமிக்கும் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. அதனால் அமலாக்கத்துறை முன் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பப்பட்டது.இதை தொடர்ந்து ஸ்ருதி லட்சுமி நேற்று கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை முன் ஆஜரானார். அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணைக்கு பின் ஸ்ருதி லட்சுமி அளித்த பேட்டியில் கூறியதாவது:


மான்சன் வீட்டில் நடந்த விழாவில் கலந்து கொண்டு நடனமாடினேன். அதன் மூலம் அவர் எனக்கு அறிமுகமானார். எனக்கு முடி உதிர்தல் பிரச்னை இருந்ததால், அவரிடம் சிகிச்சை பெற்றுக் கொண்டேன். ஆனால் பிரச்சினை இன்னும் அதிகமானது. அப்போதுதான் அவர் ஒரு போலியானவர் என்பதை அறிந்து கொண்டடேன்.அவருடன் எனக்கு தொழில்முறை உறவு மட்டுமே உண்டு. அவரது குடும்பமும், எங்களது குடும்பமும் நட்பாக இருந்தது உண்மை. அப்போது எங்களுக்கு அவர் போலியான நபர், மோசடியான நபர் என்று தெரியாது. என்றார்.