• Tue. Nov 3rd, 2026

வாடிப்பட்டி வாரச்சந்தையில் ரூ1 கோடிக்கு ஆடு கோழி விற்பனை..,

வாடிப்பட்டி ஆட்டு சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரு கோடிக்கு மேல் ஆடு,கோழி விற்பனை வியாபாரிகள் மற்றும் ஆடு வளர்கும்விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை தனியார் சந்தை நடைபெறுவது.இதில் மாடு ஆடு கோழி பலசரக்கு பொருட்கள் காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படும். இந்நிலையில் வழக்கம் வரும் 8ந் தேதி தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு இன்று வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு ஆடுகள் சந்தைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. குறிப்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாமக்கல் ஈரோடு கரூர் திண்டுக்கல் சேலம் போன்ற தொலைதூர மாவட்டங்களில் இருந்தும் ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது.

வெள்ளாடு செம்மரி உள்ளிட்ட பல்வேறு வகையான ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது ஆடுகளின் விலை குட்டி ரூ. 8 ஆயிரம் முதல் அதிகபட்சம் 25 ஆயிரம் வரை விற்பனை ஆனதாக ஆடு வளர்ப்பவர்கள் கூறினார்கள். சராசரியாக வாரத்தில் 50 லட்சத்திற்கு விற்பனையாகும். ஆடுகளின் மொத்த விற்பனை தீபாவளி பண்டிகை என்பதால் ஒரு கோடிக்கு மேல் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

அதிகாலை 4 மணி முதல் ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது ஆடுகளை வாங்குபவர்களும் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் வந்து மொத்தமாக ஆடுகளை வாங்கிச் சென்றனர். இதனால் வாடிப்பட்டி ஆட்டுச் சந்தையில் அளவுக்கு அதிகமான கூட்டம் இருந்ததால் ஆடு வளர்ப்போர் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.