• Tue. Nov 3rd, 2026

கிராம செவிலியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசுக்கு கோரிக்கை..,

ByKalamegam Viswanathan

Nov 3, 2026

மதுரை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள துணை சுகாதார நிலையம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கிராம சுகாதார செவிலியர்கள் ஒப்பந்த செவிலியர்களால் பாதிப்பு அடைவதாக புகார் தெரிவித்துள்ளனர் கிராம செவிலியர்களான தங்களுக்கு உரிய பணிபாதுகாப்பை அரசு வழங்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கியமாக கிராம சுகாதாரசெவிலியர்கள் கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு சர்க்கரை நோய் ரத்த அழுத்த நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான மருத்துவ உதவிகளை அவர்களின் வீடுகளுக்கு சென்று சேவைகள் செய்து வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக கிராம செவிலியராக பணிபுரிந்து வரும் இவர்களுக்கு உரிய பணி பாதுகாப்பு தற்போது கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒப்பந்த செவிலியர்களாக பணிபுரிந்து வரும் மருத்துவமனை செவிலியர்கள் தங்களுக்கு துணை சுகாதார நிலையத்திலும் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மேற் பார்வையாளராக பணிபுரிவதற்கான ஆணிகளை வழங்க வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதன் காரணமாக பல ஆண்டுகளாக கிராமத்தில் பணிபுரிந்து வரும் கிராம சுகாதார செவிலியர்களின் பணி பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தமிழகத்தில் பணிபுரிந்து வரும் கிராம சுகாதார செவிலியர்கள் தங்களுக்கு உரிய பணி பாதுகாப்பை வழங்க வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் கிராம சுகாதார செவிலியர்கள் சுகாதாரத் துறைக்கும் தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் தங்களைப் போல் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் பணிபுரியும் கிராம சுகாதார செவிலியர்களுக்கு உரிய பணி பாதுகாப்பை வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.