• Sun. Nov 1st, 2026

சிறைக்கடை பூட்டு!” – கைதிகள் தப்பியோடிய சம்பவத்தின் எதிரொலி..,

BySeenu

Nov 1, 2026

கோவை மத்திய சிறை வளாகத்தில் இருந்து கைதி ராகவன் தப்பியோடிய எதிரொலியாக, சிறைத்துறை சார்பில் பொதுமக்களுக்காக இயங்கி வந்த பெட்ரோல் பங்க், உணவகம் மற்றும் இறைச்சிக் கடைகள் ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளன.
​
கோவை அன்னூர் காவல் நிலையக் காவலில் இருந்து நீதிமன்றக் காவலுக்கு அழைத்து வரப்பட்ட கைதி ராகவன், கோவை மத்திய சிறை வளாகத்திற்குள் வைத்து நேற்று முன்தினம் போலீசாரைக் கண்ணிமைக்கும் நேரத்தில் ஏமாற்றி விட்டுத் தப்பியோடினான். அதேபோன்று தேனி, சென்னை உள்ளிட்ட சிறைகளில் இருந்தும் கைதிகள் தப்பிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
​
கோவை மத்திய சிறை நிர்வாகம் சார்பில் வெளிவளாகத்தில் இயங்கி வந்த வணிகச் செயல்பாடுகள் உடனடியாக முடக்கப்பட்டு உள்ளன. ​இதன் படி,
​சிறைவாசிகளின் நல்வாழ்வு மற்றும் மறுவாழ்வு நிதியின் கீழ் இயங்கி வந்த இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் கைதிகளால் சமைக்கப்பட்டுப் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் சிறை உணவகம் (Prison Bakery & Restaurant), சிறை வளாகத்தில் செயல்பட்டு வந்த இறைச்சிக் கடைகள் (Meat Stalls) ஆகியவை தற்காலிகமாகப் பூட்டப்பட்டு உள்ளன.
​
மறு உத்தரவு வரும் வரை இந்தப் பிரிவுகள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்படும் என்றும், பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் சிறை வளாகத்தின் வெளிக்காவல் அமைப்புகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட பின்னரே மீண்டும் திறக்கப்படும் என்றும் சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

​இதனிடையே, சிறை வாசலில் இருந்து தப்பியோடிய கைதி ராகவனைப் பிடிக்கப் பந்தயசாலை தனிப்படை போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.