மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளின் அடிப்படை வசதிகள் தொடர்பாக செயல் அலுவலரை நேரில் சந்தித்து பொதுமக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனு வழங்கப்பட்டது

குறிப்பாக, 18 வார்டுகளிலும் சாலை வசதிகளை மேம்படுத்துதல், மின்விளக்கு இல்லாத பகுதிகளில் மின்விளக்குகள் அமைத்தல், தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்துதல், தேங்கியுள்ள குப்பைகளை அகற்றுதல் மற்றும் சாக்கடைகளை முறையாக சுத்தம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மனுக்கள் சோழவந்தான் பேரூராட்சி மூன்றாம் வார்டு தமிழக வெற்றி கழக நிர்வாகி சோலை ராம்குமார் தலைமையில் நிர்வாகிகள் வழங்கினார்கள்.
மனுக்களை பெற்றுக்கொண்ட செயல் அலுவலர் கூறுகையில்,
சாலைப் பணிகளுக்கான எஸ்டிமேட் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் உரிய பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் மற்ற கோரிக்கைகள் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என செயல் அலுவலர் தெரிவித்ததாக கூறினார்கள்.
