கோவை ராமநாதபுரம் பகுதியில், தேசத்தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-ஆவது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, அகில இந்திய காங்கிரஸ் குழுவின் (சிறுபான்மைத் துறை) தேசிய ஒருங்கிணைப்பாளரும், ஆந்திரப் பிரதேச மாநில பொறுப்பாளருமான டி. டென்ஸ்டன் ராஜா தலைமை தாங்கினார். விழாவின் முக்கிய நிகழ்வாக, ராமநாதபுரம் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவப் படத்திற்கு அவர் மாலை அணிவித்து, வீர வணக்கம் செலுத்தி மரியாதை செய்தார்.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்களும் காங்கிரஸ் கட்சியினரும் தேவர் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். விழாவில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.