• Fri. Oct 30th, 2026

உசிலம்பட்டியில் தேவர் ஜெயந்தி விழா..,

ByP.Thangapandi

Oct 30, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேவர் திருமகனாரின் 119 -வது ஜெயந்தி விழா மற்றும் 64 -வது குருபூஜை விழாவை முன்னிட்டு உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகில் நிறுவப்பட்டுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் பி.கே.மூக்கையா தேவர் திருஉருவ சிலைகளுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் சமுதாய அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.,

இதில் திமுக சார்பில் நகரச்செயலாளர் எஸ்.ஓ. ஆர்.தங்கபாண்டியன், வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித் பாண்டி, மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி, தெற்கு ஒன்றிய செயலாளர் முருகன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.,

தொடர்ந்து அதிமுக சார்பில் உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பா.நீதிபதி தலைமையும் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.,

அதனைத் தொடர்ந்து தேமுதிக சார்பில் தொகுதி பொறுப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கருமாத்தூர் பாண்டி, நவரச்செயலாளர் அசோகன், ஒய்.எஸ்.டி. சமுத்திரபாண்டி, சேடப்பட்டி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், வில்லானி செல்வம், தர்மா மாயி அழகுராஜா போத்திராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.,

மேலும் உசிலம்பட்டி ரியல் எஸ்டேட் சங்கத்தின் சார்பில் தலைவர் தேவராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.,

தொடர்ந்து தேவர் சிலை முன்பு வைக்கப்பட்ட 57 பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைகளுக்கு மரியாதை செலுத்தி வழிபாடு செய்தனர்.,,