• Fri. Oct 30th, 2026

சோழவந்தானில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா..,

ByKalamegam Viswanathan

Oct 30, 2026

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையத்தில் உள்ள அவரின் திரு உருவ சிலைக்கு திமுக சார்பில் சோழவந்தான் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் வெங்கடேசன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் வாடிப்பட்டி தெற்கு பசும்பொன்மாறன் வடக்கு பால ராஜேந்திரன் வாடிப்பட்டி பேரூர் நிர்வாகி.மு.பா பிரகாஷ் சோழவந்தான் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் சி பி ஆர் சரவணன்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் அவைத்தலைவர் தீர்த்தம் என்ற ராமன் பேரூராட்சி துணைத் தலைவர்கள் லதா கண்ணன் வாடிப்பட்டி கார்த்திக் பேரூர் துணைச் செயலாளர்கள் ஸ்டாலின் கொத்தாலம் செந்தில் வேல் பேரூராட்சி கவுன்சிலர்கள் முத்துச்செல்வி சதீஷ் சிவா குருசாமி செல்வராணி வார்டு கவுன்சிலர் ரவி சங்கங்கோட்டை சந்திரன் கண்ணதாசன் சிற்றரசு கேபிள் ராஜா சசிகலா சக்கரவர்த்தி வழக்கறிஞர் கோகுல்ராஜ் எஸ் எம் பாண்டியன் எஸ் ஆர் சரவணன் அறிவழகன் நூலகர் ஆறுமுகம் உள்பட திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மறத்தமிழர் சேனை நிர்வாகி ஆதி முத்துக்குமார் சார்பில் திமுகவினருக்கு மரியாதை செய்யப்பட்டது.