• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

வலிமை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பயன்பட வேண்டும்

அஜீத்குமார் – வினோத் கூட்டணியில் உருவாகி உள்ள படம் ‛வலிமை’. கொரோனா பிரச்னையால் இரண்டு ஆண்டுகளாக முடங்கி இருந்த இந்த படம் பொங்கலுக்கு வெளிவர உள்ளது. ஹூயுமா குரேஷி நாயகியாகவும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர் யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ளார்.

போனி கபூர் தயாரித்துள்ளார்.இப்படத்தின் இரண்டு பாடல்கள், முன்னோட்டம் மற்றும் மேக்கிங் வீடியோ ஆகியவை வெளியாகி இருந்தது. இந்நிலையில் டிசம்பர் 30 அன்று மாலை 6.30 மணியளவில் படத்தின் டிரைலரை வெளியிட்டனர். 3.05 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த டிரைலர் முழுக்க அதிரடி ஆக்க்ஷன் காட்சிகளாக நிறைந்துள்ளன.

டிரைலரின் ஆரம்பமே அதிரடி ஆக்க்ஷன் உடன் ஆரம்பமாகிறது. படத்தில் அர்ஜூனன் என்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் அஜித்குமார்நடித்துள்ளார்.மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்றலாகி வரும் அஜித்குமார் ஒரு தற்கொலை தொடர்பான விசாரணையில் ஈடுபடுகிறார்இதன் பின்னணியில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பெரிய கிரைம் நெட்வொர்க் இருப்பதை கண்டறியும் அஜித்குமார் அதை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதையாக இருக்கும் என டிரைலர் உணர்த்துகிறது.


வில்லனாக கார்த்திகேயன் மிரட்டலாக நடித்துள்ளார். 3 நிமிடம் டிரைலர் மொத்தமும் அதிரடி ஆக்க்ஷன் காட்சிகள் தான் தூள் கிளப்பி உள்ளது. அஜீத்குமார் ரசிகர்கள் என்ன எதிர்பார்ப்பார்களோ அதை டிலைரில் இயக்குனர் பூர்த்தி செய்துள்ளார் . ஹாலிவுட் தரத்திலான ஆக்ஷன் காட்சிகளும், பைக் சேஸிங் காட்சிகள் இடம் பெற்றுள்ளனஏழையா இருந்துட்டு உழைப்பவர்களை கேவலப்படுத்தாத, உயிரை எடுக்குற உரிமை நமக்கு இல்ல.

ஜெயிக்கணும், பணம் சம்பாதிக்கணும். வலிமை இருப்பவன் அவனுக்கு என்ன தேவையோ அதை எடுத்து கொள்வான். வலிமை அடுத்தவனை காப்பாற்றத்தான், அழிக்க அல்ல…. தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவனிடம் அவனது சமநிலை தவறினால் அவனது கோபம் எப்படி இருக்கும் என்பதை காட்டுவேன்… உள்ளிட்ட வசனங்களும் டிரைலரில் கவனம் ஈர்த்துள்ளன.

மொத்தத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள் இனி ‘வலிமை அப்டேட்’ என எங்கும் குரல் எழுப்ப மாட்டார்கள். அந்தளவுக்கு ஒரு மாஸான அதிரடி டிரைலரை வழங்கி உள்ளார் வினோத்.

அதேசமயம் காலை முதலே டிரைலரை எதிர்பார்த்த ரசிகர்கள் வலிமை பற்றி சமூகவலைதளங்களில் அதிகம் டிரெண்ட் செய்த வண்ணம் இருந்தனர். டிரைலர் வெளியான பின் உலகளவில் டிரெண்ட் ஆக்கினர். டிரைலர் வெளியான அரைமணி நேரத்திலேயே 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்தன.