விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் உள்ள தாலுகா அலுவலக வளாகத்தில் பருவமழை குறித்து ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் பால்பாண்டி தலைமையில் நடைபெற்றது. வெம்பக்கோட்டை தாசில்தார் ஆனந்தராஜ் முன்னிலை வகித்தார்.

மண்டல மேலாளர் பால்பாண்டி கூறியது
இந்த ஆண்டு பருவமழை குறைந்த நேரத்தில் அதிக மழை பெய்ய கூடிய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகையால் வருவாய் கிராமங்களில் உள்ள கிணறுகள் ,குளம்,கண்மாய், ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கண்மாய் கரைகள் சேதம் அடைந்து இருந்தால் உடனுக்குடன் தகவல் தெரிவித்து சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்மாய்கள் முழுமையாக நிரம்பினால் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு தண்ணீருக்குள் இறங்க கூடாது என எச்சரிக்கை அறிவிப்புகள் தண்டோரா மூலமும் தெரிவிக்க வேண்டும். வெள்ளம் காரணமாக விபத்து ஏதும் நடக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். என கூறினார். ஆலோசனை கூட்டத்தில் வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.




