தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் இந்திய ரயில்வேயின் தூய்மைப் பணிகளுக்கு வலுசேர்க்கும் வகையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் சார்பில் சினிமா கதாபாத்திரங்கள் வேடமணிந்து பயணிகளிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது

.
தெற்கு ரயில்வே காவல் துறையின் கலைக் குழுவினர் பல்வேறு பிரபல சினிமா கதாபாத்திரங்களின் வேடங்களை அணிந்து ரயில் பயணிகளைச் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர் .

இந்நிகழ்ச்சியின் போது , ரயில் நிலைய வளாகங்களில் குப்பைகளை வீசக்கூடாது, பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது, மற்றும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை நடைமேடைகளிலும் தண்டவாளங்களிலும் எறியக்கூடாது எனப் பயணிகளிடம் வலியுறுத்தப்பட்டது .
மேலும், ரயில்களில் பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு செல்லக்கூடாது என்றும், ரயில்கள் மீது கல்வீசுவது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது . பயணிகள் மற்றும் ரயில்வே சொத்துகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பொதுமக்களிடையே பொறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தாம்பரம் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் வையாபுரி மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை காவலர்கள் கலந்து கொண்டனர்.




