தமிழ்நாடு தலித் விடுதலை இயக்கம் மாநில தலைவர் கருப்பையா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: –
தமிழகத்தில், பட்டியல் மற்றும் பழங்குடியின மக்கள் பிற்படுத்தப்பட்ட சாதியினரால் படுகொலை செய்யப்பட்டால் அச்சம்பவம் குறித்து SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டம் வழக்காக காவல்துறையினரால் பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்காக SC/ST வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் விதிமுறைகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதுகாப்பதற்காகவும், குடும்ப பராமரிப்பிற்காகவும் SC/ST வன்கொடுமைகள் தடுப்புச்சட்டம் விதிமுறைகளின் அடிப்படையில் குடும்ப ஓய்வூதியம் மாநில அரசால் வழங்கப்படுகிறது.

இந்த சிறப்பு ஓய்வூதிய திட்டமானது தமிழக அரசின் அரசாணை எண் 16 நாள் 13.02.2025ன்படி பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் மாதந்தோறும் குடும்ப ஓய்வூதியமாக தலா ரூ.16,950 (ரூபாய் பதினாறாயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பது மட்டும்) வழங்கப்பட வேண்டும் என அரசாணை வலியுறுத்துகிறது.

ஆனால், தமிழகத்தில் கடந்த 2026 ஜனவரி மாதம் 835 பாதிக்கப்பட்ட குடும்பங்களை சார்ந்த பயனாளிகளின் குடும்பங்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியமாக தலா ரூ.17,850 (ரூபாய் பதினேழாயிரத்து எண்ணூற்று ஐம்பது) வழங்கப்பட்டதோடு, கடந்த 2026 பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய 03 மாதங்களுக்கு மாநில அரசால் 843 பயனாளிகளுக்கு வழங்கப்பட வழங்கப்பட வேண்டிய ரூ.4,51,42,650/- (ரூபாய் நான்கு கோடியே ஐம்பத்தோரு லட்சத்து நாற்பத்திரண்டாயிரத்து அறுநூற்று ஐம்பது) மட்டும் கடந்த 03 மாதங்களாக வழங்கப்படவில்லை.

1/3மேலும், பட்டியல் இன மக்களின் வாழ்வாதாரத்தையும், குடும்ப பராமரிப்பிற்காக அரசின் விதிமுறைகளின் அடிப்படையில் வழங்கப்படும் பட்டியல் மற்றும் பழங்குடியின மக்கள் கொலை செய்யப்பட்டால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியமானது நடப்பு நிதியாண்டில் மூன்றாவது முறையாக கடந்த ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய மூன்று மாதங்களாக நிறுத்திவைப்பதென்பது மிகவும் வறுத்தத்திற்குரியது.
குறிப்பாக, தமிழக அரசால் பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களின் குடும்ப ஓய்வூதியமாக 835 நபர்களுக்கு வழங்கப்படுவதாக தமிழக அரசின் ஆதிதிராவிடர் R.C.No.DADW/1595/2026-H3 Dt. 11.08.2026 நாளிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசின் புள்ளி விவரங்களின்படி 2017 முதல் 2023 வரை தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 1230 குடும்பங்களுக்கு குடும்ப ஓய்வூதியமும், சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டங்களையும் இன்று வரை தமிழக அரசால் நடைமுறைப் படுத்தவில்லை. மேலும் 2024 மற்றும் 2025, 2026 அக்டோபர் வரை தமிழக அரசால் பாதிக்கப்பட்ட பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களின் குறிப்பிடத்தக்கது. வெளியிடவில்லை பட்டியலை என்பதும்

எனவே, தாங்கள் இப்பிரச்சனையில் நேரடியாக தலையிட்டு பாதிக்கப்பட்ட பட்டியல் மற்றும் பழங்குடியின குடும்பங்களை சார்ந்த 835 குடும்பங்கள் மற்றும் 2024, 2025, 2026 அக்டோபர் வரை பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு உடனடியாக மாநில அரசு ஆதிதிராவிட நலத்துறை மூலமாக வழங்கிட வேண்டி குடும்ப ஓய்வூதியங்களையும், சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டங்களையும் உடனடியாக வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதோடு, 03 மாதங்கள் குடும்ப ஓய்வூதியம் வழங்காமல் திட்டமிட்டு காலம் கடத்திய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதோடு வழங்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள குடும்ப ஓய்வூதியத்திற்கு அரசின் விதிமுறைப்படி வட்டியோடு வழங்கிடவும், வரும் காலங்களில் பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு ஒவ்வொரு மாதமும் மாதத்தின் முதல் தேதி அல்லது மாத இறுதியில் குடும்ப ஓய்வூதியம் வழங்கிட ஆவன செய்திடுமாறு தங்களை மிகவும் அன்போடு வேண்டுகிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




