• Fri. Oct 23rd, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

சேற்றில் சிக்கி உயிரிழந்த நான்கு பள்ளி மாணவர்களின் குடும்பத்தினருக்கு நிதி வழங்கி ஆறுதல்..,

ByPrabhu Sekar

Oct 23, 2026

​குரோம்பேட்டை லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த யுவனேஷ் (10), தேவதர்ஷன் (12), பூஜா (13), குஷி (13 ஆகிய நான்கு பள்ளி மாணவர்களும் கடந்த விடுமுறை நாளில் விளையாடச் சென்றபோது வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் குரோம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

​மறுநாள் காலை குரோம்பேட்டை பெரிய ஏரியில் 4 மாணவர்களின் உடல்களும் சடலங்களாக மீட்கப்பட்டன. முதற்கட்ட விசாரணையில், விடுமுறை நாளில் ஏரிக்குச் சென்ற சிறுவர்கள் சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.

​இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பல்லாவரம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மனிதவளத் துறை அமைச்சர் சரத்குமார் உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோரை நேரில் வரவழைத்து ஆறுதல் கூறினார்.

மேலும், தமிழக அரசு சார்பில் தலா மூன்று லட்சம் ரூபாய் நிதியுதரியை அவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் சரண்யா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி மற்றும் வட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர்.