தேனி மாவட்டம் வள்ளுவர் காலனி பகுதியில், முறையான கழிவுநீர் குழாய் மற்றும் வடிகால் வசதி இல்லாததால், அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பகுதியில் கழிவுநீர் வெளியேறுவதற்கான உரிய வசதி இல்லாததால், கழிவுநீர் தேங்கும் நிலை ஏற்படுவதாகவும், இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த செல்லபாண்டி, பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
பல ஆண்டுகளாகத் தொடரும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், வள்ளுவர் காலனியில் முறையான கழிவுநீர் வடிகால் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா? வள்ளுவர் காலனி மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு எப்போது தீர்வு கிடைக்கும்?
இதற்குச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.




