மே 10ம் தேதி முதல்வராக பொறுப்பேற்று அன்றைக்கு உறுதிமொழி ஏற்ற விஜய் ஜெயித்து விட்டோம் ஒரு ஆட்டத்தை ஆடி விடுவோம் என நினைத்தால் இந்த நிமிஷமே அழித்து விடுங்கள் , இங்கு ஒரே பவர் சென்டர் நான் மட்டும் தான் என்று கூறினார்.

ஆனால் இன்றைக்கு தவெக அரசில் 5 மாதத்தில் பவர் சென்டர்கள் தலை விரித்து ஆடுகிறது. முதல்வரின் ஆலோசகர்கள், அமைச்சர்கள், முதல்வரின் உதவியாளர்கள், நண்பர்கள், ஜோதிடர், ஓட்டுநர் குறிப்பிட்ட அதிகாரிகள் சிலர் என தவெக ஆட்சியில் பவர் சென்டருக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. இதில் பவர் சென்டர்கள் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்இந்த ஐந்து மாத காலத்தில்.
கடந்த காலத்தில் ஆட்சியாளர்களின் பவர்சென்டரால் தான் ஆட்சி பறிபோறிபோய் ஆட்சிக்கு என்டு கார்டு போடப்பட்டது என்பதை மறந்து விட்டு, இந்த பவர் சென்டர்களின் ஆட்டம் இன்றைக்கு தமிழகத்தில் மிகப்பெரிய கவலை ஏற்படுத்தி இருக்கிறது. ஏன் முதல்வர் விஜய் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்? என்பதுதான் மக்களுக்கு கேள்வியாக இருக்கிறது.

அரசு வழக்கறிஞர் நியமனத்தில் பணம் பெற்றதாக எழுதப்பட்ட குற்றச்சாட்டு, தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து மின்சார துறையில் மின் கட்டண உயர்வு, அறிவிக்கப்படாத மின்வெட்டு, தற்போது மின் கொள்முதல் என கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. 4500 மெகவாட் கொள்முதல் என்று முதலில் டெண்டர் வெளியிட்டு , பின் கடும் சர்ச்சை வெளியாகும் போது 300 மெகாவாட்டாக அதை குறைத்து இப்போது மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் இன்றி மாதம்1000 மெகாவாட் வாங்க 7 மாதங்களுக்கான டெண்டர் ஒன்று வெளியிடப்பட்டது.
இதில் என்ன சர்சைஎன்றால் ஒரு யூனிட் மின்சாரம் தற்போது மும்பை போன்ற மாநிலங்களில் ரூபாய் 13 முதல் 15 ரூபாய் குறைந்த விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த கால ஆட்சியாளர்கள் கொள்முதல் செய்த விலையை விமர்சித்த மின்சாரத்துறை அமைச்சர், தற்போது தூய சக்தி தவெக அரசு, மக்கள் பணத்தில் ஏன் ஒரு யூனிட் மின்சாரம் அதிக விலை கொடுத்து அதாவது 35 ரூபாய் கொடுத்து வாங்குகிறது என்பதுதான் முரட்டு சந்தேகத்தை மக்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது .காற்றாலை மின்சாரம் தயாரிக்க தனியாருக்கு ஒப்புதல் வழங்க ஒரு மெகாவாட்டுக்கு 15 லட்சம் கமிஷன்பெறப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் புதிய நர்சிங் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு தலா ஒரு கல்லூரிக்கு 75 லட்சம் தரப்பட்டிருப்பதாகவும் சர்ச்சையாக உள்ளது.

மதுரையில் தவெக கட்சி பதவிக்கு கமிஷன் வாங்கும் ஆடியோ வெளியாகி தவெக கட்சிக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது .இன்னொரு புறத்தில் நாகப்பட்டினத்தில் 135 கிலோ போதை பொருளை மத்திய புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்து தவெக நிர்வாகி பூபாலன் மற்றும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டு அதில் மூளையாக செயல்பட்டிருப்பது தவெக மானம் காற்றில் பறக்கிறது.தவெக கட்சியில் கட்சிப் பதவிக்கு பணம் கேட்பது தவெகவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது .
தவெக நிர்வாகிகள் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டுஇருப்பது தவெகவின் மானம் காற்றில் பறக்கிறது.பேரம், போதை பொருள் கடத்தல், பாலியல் வன்கொடுமை ஈடுபடுதல், சம்பவங்கள் உள்ளிட்ட விவகாரம் இவைகளால் தவெகவின் நிர்வாகிகள் தலை உருளுகிறது.
தவெக கட்சி தொடங்கியதிலிருந்து சர்ச்சைகள் வரிசை கட்டி நிற்கின்றன முதல் சர்ச்சையாக விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் ஆலோசகராக ராதன்பண்டிட்டைஅரசு அதிகாரியான நியமித்ததில் பல தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்ததால் அந்த அரசாணையை திரும்ப பெறப்பட்டது .அதிலிருந்து அரசாணை வெளியிடுவதில் மர்மம் நீடித்து வருகிறது . பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அரசாணை வெளியிட்டது? இது போன்ற சர்ச்சை நீடித்து வருகிறது.

இவ்வளவு சர்ச்சைகள், விமர்சனங்கள், பேரங்கள், ஊழல்கள் ,தவெக அரசில் தலை விரித்து ஆடுகிற பொழுது முதல்வருக்கு தெரிந்து தான் இது எல்லாம் நடக்கின்றனவா ?இல்லை அவருடைய கவனத்திற்கு செல்ல வில்லையா என்பதுதான் பொதுமக்களின் கேள்வியாக இருக்கிறது ஏனென்றால் இதுகுறித்தும் முதல்வர் வாய் திறக்கவில்லை ?இது குறித்து எடப்பாடியார் கூட ஏன் முதல்வர் விஜய் மௌனசாமியாராக உள்ளார் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
ஆகவே மக்களே நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் இந்த5 மாதங்களில் தவெக ஆட்சியின் தடுமாற்றத்தை நீங்கள் பார்த்துக்கொண்டு உள்ளீர்கள். மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசா கூட தொடமாட்டோம், தொட்டவனையும் விட மாட்டோம் என்ற விஜயின் கொள்கை தற்போது தவெக அரசில் யூ டர்ன் அடித்து நிற்கிறது . மொத்தமாக தவெக அரசு யூ டர்ன் அடித்து மக்களுக்கு மாற்றத்தை பதிலாக ஏமாற்றத்தை தந்துள்ளது என கூறினார்




