கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்து வரும் இந்த பிரச்சனையின் தொடர்ச்சியாக, இன்று இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்தது.

இதுகுறித்து தேனி மாவட்ட பார்வர்ட் பிளாக் மாநில செயலாளர் எம்.பி.எஸ். முருகன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.
நாங்கள் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் இந்த புதிய பேருந்து நிலையப் பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை அமைதியான முறையில் இயக்கி வருகிறோம். ஆனால், கடந்த 1 வருடமாகத் தொடர்ந்து இந்த பிரச்சனை நடந்து வருகிறது. கடந்த 7 மாதங்களாக வேண்டுமென்றே சிலர் கலவரத்தை ஏற்படுத்தி, எங்களைச் சண்டைக்கு அழைத்து அதன் மூலம் எங்கள் மீதும் ஓட்டுநர்கள் மீதும் பி.சி.ஆர். வழக்குகளைப் போட்டு மிரட்டுகின்றனர். தீபாவளி போன்ற பண்டிகைகளைக் கூட நிம்மதியாகக் கொண்டாட விடாமல் அச்சுறுத்துகிறார்கள் என்றார்.

மேலும் பேசிய அவர், காவல்துறையினர் மற்றும் ஏ.டி.எஸ்.பி. மகேஷ் சார் தரப்பில் அறிவுறுத்தப்பட்டபடி, நாங்கள் எங்களது ஸ்டாண்டில் சட்டத்திற்கு உட்பட்டு நடந்து கொள்கிறோம். ஆனால், எங்களைச் சிலர் வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து பொய் வழக்கு போட முயல்கின்றனர். நாங்கள் யாருக்கும் தொந்தரவு செய்யவில்லை, எங்களது ஆட்டோக்களை ஓட்டி பிழைப்பு நடத்தவே வந்துள்ளோம் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் காவல் துறை அதிகாரிகள், இரு தரப்பு ஆட்டோ ஓட்டுநர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைக் கலைந்து செல்லச் செய்தனர். இதன் மூலம் அப்பகுதியில் சிறிது நேரம் நிலவிய பரபரப்பு தணிந்தது.



