மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 4வது வார்டு பகுதியான ஆலங்கொட்டாரம் பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம் மகன் ரமேஷ் இவர் தனது வாழ்வாதாரத்திற்காக 5 பசு மாடுகளை வளர்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை சோழவந்தான் ஆண்டியப்பன் மேடு கீழ்பகுதியில் உள்ள வயல் பகுதிக்கு பசு மாடுகளை மேய்ச்சலுக்காக கொண்டு சென்றுள்ளார் இந்த நிலையில் 6:00 மணி அளவில் மேச்சலில் இருந்தா மாடுகளை அழைத்து வர முயன்ற போது ஐந்து மாடுகளும் ஒவ்வொரு திசையும் பக்கம் பிரித்து ஓடி உள்ளது காரணம் புரியாமல் திகைத்து ரமேஷ் மாடுகள் ஏன் ஓடுகிறது என யோசிப்பதற்குள் அடுத்தடுத்து மாடுகள் கீழே விழுந்து இறந்துள்ளது. இதனை கண்டு கடும் அதிர்ச்சிக்குள்ளான நிலையில் இறந்த பசு மாடுகளுக்கு மேல் மின்சார வயர் அறுந்து விழுந்து கிடந்துள்ளது.

இதனால் அறுந்து விழுந்து கிடந்த மின்சார வயரில் இருந்த மின்சாரம் பாய்ந்து பசுமாடுகள் இறந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த பகுதியில் அதிக அளவு காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில் வயல்களுக்குள் புகுந்து வாழை மற்றும் நெல் கதிர்களை சேதப்படுத்தி செல்வதாக தொடர்ச்சியாக விவசாயிகளிடம் இருந்து புகார்கள் வந்த நிலையில் ஒரே நேரத்தில் ஐந்து மாடுகள் எவ்வாறு இறந்திருக்கும் என அனைவருக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் மாலை நேரத்தில் அருகில் உள்ள கண்மாய் பகுதியில் இருந்து காட்டுப்பன்றிகள் வாழை தோப்புக்குள் கூட்டமாக வந்ததில் காட்டு பன்றிகளை பார்த்த பசு மாடுகள் தெரித்து ஓடியதாக கூறப்படுகிறது.
இதில் அருந்து கிடந்த மின்சார வயிரிலிருந்து மின்சாரம் பாய்ந்து அடுத்தடுத்து பசுமாடுகள் இறந்ததாக கூறப்படுகிறது. இறந்த ஒவ்வொரு பசு மாட்டின் விலையும் ரூபாய் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை இருக்கும் என்று கூறுகின்றனர். அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் வாழை தோப்பிற்கு பொதுமக்கள் செல்லாத நிலையில் பொதுமக்களின் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மாடு தெறித்து ஓடியதில் சுதாரித்த மாட்டின் உரிமையாளர் வாழைத்தோப்பிலிருந்து வெளியில் வந்த நிலையில் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.

இறந்து கிடந்த பசு மாடுகளை கண்டு மாட்டின் உரிமையாளர் ரமேஷ் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது கண்மாய் பகுதிக்குள் திரியும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் இறந்த பசு மாட்டிற்கு உரிய நிவாரணம் உரிமையாளர் ரமேஷுக்கு வழங்க வேண்டும் என பொதுமக்கள் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



