• Thu. Oct 22nd, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

இன்ஸ்டா ரீல்ஸ் மோகத்திலிருந்து தவெக அரசும் இளைய சமுதாயத்திற்கும் எப்போது வெளியே வருவார்கள்,

ByKalamegam Viswanathan

Oct 22, 2026

ஒரு காலத்திலே அறிவைத் தேடி மனிதன் அலைந்தான் இன்று அறிவே அவனைத் தேடி அவன் கைபேசிக்குள் வந்து விடுகிறது.

பிறர் நுனியில் உலகம் இருப்பதாக நாம் பெருமிதப்படுகிறோம்; ஆனால் அந்த உலகத்தை உண்மையில் புரிந்துகொள்ளும் ஆற்றல் நமக்கு இருக்கிறதா என்ற கேள்வி தினமும் எழுந்து கொண்டே இருக்கிறது.

இன்றைய உலகில் தகவல்களின் வேகத்தை விட வேகமாக ஓடுவது மனிதர்களின் முடிவுகள் தான். உண்மையை அறிய, பொறுமை இல்லை; ஆராய நேரமும் இல்லை. காலையிலே கண் விழித்தால் தொடங்கும் செய்தி அறிவிப்புகள், சமூக ஊடகப் பதிவுகள், குறும் செய்திகள், காணொளிகள், செயற்கை நுண்ணறிவு (ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்) பதில்கள் என ஒவ்வொரு நிமிடமும் ஆயிரக்கணக்கான தகவல்கள் நம் மனதை தடுமாற வைக்கின்றன.

அளவுக்கு அதிகமான தகவல், அறிவை வளர்ப்பதற்கு பதிலாக சிந்தனையை மூழ்கடித்து விடுகிறது. முன்பெல்லாம் ஒரு செய்தி வந்தால் அது ஏன் அப்படி நடந்தது, அதன் விளைவு என்ன, அதனால் நமக்கு என்ன பயன் என்ற கேள்வி கேட்டு விவாதிப்பார்கள். அந்த இடைவெளியில் தான் புரிதல் பிறக்கிறது; ஆனால் இன்று அந்த இடைவெளியே இல்லை. ஒரு செய்தி முடிந்தவுடன் அடுத்த செய்தி, ஒரு காணொளி முடிந்தவுடன் அடுத்த காணொளி, மூளைக்கு சிந்திப்பதற்கே நேரமே நாம் கொடுப்பதில்லை. உண்மையைத் தேடும் பொறுமை நம்மை விட்டு விலகிச் சென்று வெகு காலம் ஆகிவிட்டது.

ஒரு வரலாற்று நிகழ்வை 3 வரியிலே படித்து புரிந்துவிட்டோம் என தவறான தீர்ப்பை இப்போது நாம் எழுதி வருகிறோம். இன்றைய தலைமுறையின் மிகப்பெரிய சவால், தகவல்களை பெறுவதிலே இல்லை; அவற்றை தேர்ந்தெடுப்பதில் தான் இருக்கிறது. ஒவ்வொரு நிமிடமும் நம் கவனத்தை கவர்வதற்காக, லட்சம் சமூக வலைதள பதிவுகள், சமூக வலைதளங்களிலே வரிசை கட்டி நிற்கின்றன. இளைஞர்களின் எதிர்காலமோ, கேள்விக்குறியாகி இருக்கிறது. இன்றைய சமூகத்தை இளைய சமூகத்தை பாதுகாக்க வேண்டிய தவெகதவறிவிட்டது என்பதைத்தான் இன்றைய நிகழ்வுகள் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

இன்ஸ்டா ரீல்ஸிலே புரட்சி செய்து, ஆட்சி அமைத்த தவெக அரசு, இந்த 5 மாதங்களிலே வரலாறு காணாத வகையிலே இன்ஸ்டா ரீல்ஸ்க்கு விளம்பரம் பெற்றுத் தந்திருக்கிறது தான் இளைஞர்களுக்கு கிடைத்த பம்பர் பரிசாக இருக்கிறது.

ஒரு புறத்திலே பொழுதுபோக்கிற்காக இன்ஸ்டா ரீல்ஸ்களை பயன்படுத்துவதைத் தொடங்கி, அதுவே பின் ஆரோக்கியமற்ற ஆபத்தான கடும் போட்டியாக மாறி, இளைஞர்களின் உயிரைக் காவு வாங்குகிற நிலைக்கு இன்ஸ்டா ரீல்ஸ் மோகம் சென்றுள்ளது. நமக்கெல்லாம் மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டா சமூக வலைதளத்திலே தான் தாங்கள் வளம் வருவதை சில இளைஞர்கள் ரீல்ஸாக வெளியிட்டு, தங்கள் வாழ்க்கையே தொலைத்து வருகிறார்கள். இதனால் ஏற்படும் பலிக்குப் பலி, படுகொலையை தடுக்க முடியாமல் தடுமாறி வருகிறது இன்ஸ்டா ரீல்ஸில் ஆட்சி அமைத்த தவெக அரசு. சமீபத்திலே சிவகங்கை மாவட்டத்திலே இன்ஸ்டா ரீல்ஸால் பிரபலமான சுள்ளான் மதன், 26 வயது, முன்விரோதம் காரணமாக பழிக்குப் பழியாக கொலை செய்யப்பட்டார். இதற்கு பழி தீர்ப்போம் என்று அவரது ஆதரவாளர்கள் அதே இன்ஸ்டாவிலே மிரட்டல் விடுத்து வருகிறார்கள். எங்கே போகிறது இளைய சமுதாயம்?

அதேபோல மதுரையிலே யார் டான் என்று இன்ஸ்டாவிலே வீடியோ வெளியிட்ட மோதலில், சூர்யா வயது 24 கொலை செய்யப்பட்டான். அதேபோல கோவையிலே அரிவாளுடன் வீடியோ வெளியிட்டது தொடர்பாக இரு தரப்பினர் மோதிக்கொண்டதில், அசோக் குமார் கொலை செய்யப்பட்டார். அதோடு எதிர் தரப்பினருக்கு வீடியோ மிரட்டல் விடுத்த ஸ்ரீராம் என்பவரும் பழி தீர்க்கப்பட்டார்.

அதேபோல இன்ஸ்டாவிலே பிரபலமானவர்கள் ஒருவருக்கொருவர் ஆரோக்கியமான போட்டியை கடைபிடிப்பதை விட்டுவிட்டு, அங்கே கடும் போட்டி நிலவுகிற சூழ்நிலையிலே, கடுமையான வரையறையற்ற விமர்சனங்களால் அநாகரிகமான விமர்சனங்களால் எத்தனை இன்ஸ்டா பிரபலங்கள் இன்றைக்கு தற்கொலையில் முடிவை எடுத்திருக்கிறார்கள்.

இன்ஸ்டா பிரபலங்கள் இன்றைக்கு பிராபளமாக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பிரபலம் முக்கியம்தான், ஆனால் வாழ்க்கை பிராப்ளம் ஆகிவிடக்கூடாது ஆகவே இந்த சூழ்நிலையிலே சமீபத்தில் மதுரையில் வீரமணி என்பவர் இன்ஸ்டாவிலே பிரபலமாகி, கடைசியில் அவருக்கு அதுவே வீட்டை காலி பண்ணிவிட்டு, ஊரை காலி பண்ணிவிட்டு, ஓடோடி விடுகிற ஒரு நிலை அந்த இன்ஸ்டா பிரபலம் இன்ஸ்டாவால் பிராப்ளம் ஆகி, வாழ்க்கையே விரக்தியான அந்த செய்தியும் நாடு கடந்து மாநிலம் கடந்து அந்த செய்தி மக்களின் கவனத்தை ஈர்த்தது.

சமீப காலங்களிலே சமூக வலைதளங்களில் ஆயுதமுடன் வீடியோ வெளியிடுவதும், ரவுடிசத்தை புகழ்வதும், மிரட்டல் விடுப்பதும், இளைஞர்கள் மத்தியிலே ஒரு புதிய கலாச்சாரமாக காட்டுத் தீயாக இன்றைக்கு பரவி வருவது மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இளைஞர் சமுதாயம் என்ற கவலை நமக்கு ஏற்பட்டிருக்கிறது. இன்ஸ்டாவிலே சமூக வலைதளங்களிலே தகவல் தொழில்நுட்பத்தை நாம் வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டுமே தவிர, அதிலே அதிர்ச்சி வருகிற செய்திகள் தான் இன்றைக்கு அதிகமாக இருக்கிறது. அறிவின் வளர்ச்சி மனிதனின் ஆயுளைக் கூட்ட வேண்டுமே தவிர, அவன் ஆயுளை முடிப்பதாக இருக்கக்கூடாது என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பு.

ஆகவே தவெக அரசு இன்றைக்கு தடுமாறிக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். அறிவிக்கப்படாத மின்வெட்டுக்கு அதற்கு தீர்வு காண முடியவில்லை. ஆனால் இன்ஸ்டாவிலே ரீல்ஸ் போட்டு, அவர்கள் மக்களை திசை திருப்புகிறார்கள்.

அதேபோல சட்டம் ஒழுங்கு, காப்பாற்ற முடியவில்லை. இன்ஸ்டாவிலே ரீல்ஸ் போட்டு, மக்களை திசை திருப்புகிறார்கள். விலைவாசி உயர்வு உயர்வே இல்லை என்று இன்ஸ்டாவிலே ரீல்ஸ் போட்டு, மக்களை திசை திருப்புகிறார்கள்.

இப்போது கூட வடகிழக்கு பருவமழை, ரீல்ஸ் போடுவதற்காக மட்டுமே இன்றைக்கு அமைச்சர்கள் ஆய்வு பணியை மேற்கொள்வதையும் நாம் பார்க்கிறோம். ஆகவே இன்ஸ்டா ரீல்ஸ் என்பது இளைஞர்களுக்கு மட்டுமல்ல, இன்றைக்கு தமிழ்நாட்டை ஆளுகிற தவெகஅரசுக்கும் அது ஒரு மோகமாக இருக்கிறது. ஆகவே இன்ஸ்டா ரீல்ஸ் மோகத்திலிருந்து தவெக அரசும் இளைய சமுதாயத்திற்கும் எப்போது வெளியே வருவார்கள், உண்மை உலகத்தை உணர்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என கூறினார்.