மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாடிக்கோவில்பட்டியில் இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.,

இதில் ஆண்டிபட்டி அருகே ஜக்கம்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணக்குமார் என்பவர் படுகாயமடைந்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.,

மேலும் இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஆண்டிபட்டி அருகே முத்தணம்பட்டியைச் சேர்ந்த மலைச்சாமி, நல்லுத்தேவன்பட்டியைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் ராஜா என்ற இருவர் காயமடைந்த நிலையில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.,
விரைந்து வந்த உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீசார் விபத்தில் உயிரிழந்த கிருஷ்ணக்குமார் உடலை உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்துவிட்டு தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,

விசாரணையில் விபத்தில் உயிரிழந்த கிருஷ்ணக்குமார், கர்ப்பிணியான தனது மனைவிக்கு கடந்த வாரம் தான் வளைகாப்பு நடத்தி அவரது தாய் வீட்டிற்கு அனுப்பி இருந்த தகவல் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.,



