• Wed. Oct 21st, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 83-வது ஆண்டு விழா மற்றும் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம்..,

ByAjmalkhan saleemraja

Oct 21, 2026

தேனி பழைய பேருந்து நிலையம் அருகில், அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 83-வது ஆண்டு விழா மற்றும் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள், கடந்த 1943 அக்டோபர் 21 அன்று சிங்கப்பூரில் ‘ஆசாத் ஹிந்த் சர்க்கார்’ (சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசு) அரசாஞ்சியை முதன்முதலில் பிரகடனம் செய்தார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளின் 83-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, தேனியில் ஃபார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் எழுச்சி விழாவும் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.

ஆங்கிலேயர்களின் ஆட்சியை எதிர்த்து, தேசத்தின் சுதந்திரத்திற்காகப் போராடிய நேதாஜி அவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஃபார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் இந்த விழா எழுச்சியுடன் அனுசரிக்கப்படுகிறது.

நேதாஜியின் நேர்மையையும், தியாகத்தையும், தேசப்பற்றையும் இன்றைய இளைய தலைமுறைக்கும் வருங்கால சந்ததிக்கும் கொண்டு சேர்க்க வேண்டியது அனைவரின் கடமையாகும். உண்மையான சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்தான் என்பதை உலகம் அறியச் செய்யும் வகையில், அவரது கொள்கைகளைப் பின்பற்றி தொடர்ந்து போராடுவோம் என்று எஸ் ஆர் சக்கரவர்த்தி கூறினார்

இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் தொண்டர்களும், நிர்வாகிகளும் பெருமளவில் கலந்துகொண்டு, நேதாஜி படத்திற்கு வீரவணக்கம் செலுத்தினர்.