மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள 58 கிராம பாசன கால்வாய் திட்டம் உருவாக காரணமாக இருந்த மறைந்த முன்னாள் உசிலம்பட்டி எம்எல்ஏ பி.என்.வல்லரசு நினைவிடத்தில், அவரது 25 வது நினைவு தினத்தை முன்னிட்டு., உசிலம்பட்டி தவெக எம்எல்ஏ விஜய் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்., இதில் 58 கிராம பாசன விவசாய சங்கத்தினர், கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.,
தொடர்ந்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.,

தொடர்ந்து பேசிய எம்எல்ஏ விஜய்.,
நமது தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து நமது தொகுதியின் வளர்ச்சிக்கும் நமது மக்களின் வளர்ச்சிக்கும் அரும்பாடு பட்ட பி.என்.வல்லரசு ஐயா அவர்களின் நினைவேந்தலுக்கு என்னை அழைத்தமைக்கு குடும்பத்தாருக்கும், 58 கால்வாய் சங்கத்தினருக்கும், அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.,

58 கால்வாய்க்கு விவசாய சங்கத்தினர் போராடிக் கொண்டிருக்கும் அவர்களுக்காக வல்லரசு என்ன கனவு கண்டாரோ மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ அந்த திட்டத்தை முழுமையடையாமல் இவ்வளவு காலம் கடந்து விட்டது.,
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மாண்புமிகு முதலைமைச்சர் விஜய் அண்ணன் அவர்கள் இந்த திட்டத்தை கண்டிப்பாக நிறைவேற்றுகிறேன் என்று சொல்லியுள்ளார் கண்டிப்பாக நிறைவேற்றி நிரந்தர அரசாணையை கொண்டுவந்து கொடுப்போம்.,
நம்ம மக்களுக்கு இந்த நீரை கொண்டுவந்து கொடுத்து அவர்களின் தாகத்தை கண்டிப்பாக தணிச்சிடுவோம் அதற்கு அரும்பாடுபட காத்திருக்கிறேன் கண்டிப்பாக அதை செய்து கொடுத்துவிடுவேன் சட்ட மன்ற உறுப்பினராக என்னை தேர்ந்தெடுத்துள்ளனர் நல்ல மனிதர், நல்ல தலைவர் வேண்டுமென இந்த ஆட்சி வந்திருக்கிறது அதனால் கண்டிப்பா முயற்சி எடுப்பேன், முயற்சி மட்டுமல்ல முடித்தும் கொடுப்பேன் ஏன் என்றால் இந்த இடத்தில் முன்னாள் மாணவரா இந்த இடத்தில் இருக்கிறேன் என பேசினார்.,



