மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கேசம்பட்டி ஊராட்சி சித்தருவிப்பட்டியில் 20-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.
அடிப்படை சாலை வசதி இல்லாததால் பள்ளி செல்லக்கூடிய மாணவ,மாணவியர்கள் அவசர மருத்துவ சிகிச்சைக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

இந்த கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறையும் உள்ளது. சாலை,குடிநீர் வசதி கேட்டு கிராம சபைக் கூட்டத்திலும் பலமுறை தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள். மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு கொடுத்துள்ளார்கள். இருப்பினும் நடவடிக்கை இல்லை.
வாகனங்கள் குறைவாக இயக்கக்கூடிய சாலையை எட்டுவழிச்சாலைகளாக அமைக்கும் அரசு சித்தருவிப்பட்டி மக்களை கண்டுகொள்ளாமல் இருப்பது கொடுமை.
மக்களுக்கு தேவையின் அடிப்படையில் செய்வதுதான் சரியானதாக இருக்கும்.

எனவே சித்தருவிப்பட்டி மக்களுக்கு சாலை ,குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களையும்,தமிழ்நாடு அரசையும் கேட்டுக்கொள்கிறோம்.



