மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் பேரூர் கழகம் சார்பாக சோழவந்தான் மற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கிளை கழகங்களில் அதிமுக தொடங்கப்பட்டு 55 வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

திரு வடகம் கிராமத்தில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் சி பி ஆர் மணி தலைமையில் அதிமுகவினர் எம்ஜிஆரின் திரு உருவப்படத்திற்கு மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர் சோழவந்தான் பெரிய கடை வீதியில் மாவட்ட நிர்வாகி முன்னாள் சேர்மன் எம்கே முருகேசன் தலைமை தாங்கி அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய துணைச் செயலாளர் மீனாட்சி சுந்தரம், மற்றும் அதிமுக நிர்வாகிகள் சேது கண்ணன், பூக்கடை முருகன், அழகர், காமாட்சி மற்றும் பெட்டிக்கடை சக்திவேல் பழக்கடை மோகன், ஜூஸ் கடை கென்னடி உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதே போல் இரும்பாடி பாலகிருஷ்ணாபுரத்தில் உள்ள எம்ஜிஆரின் திரு உருவ சிலைக்கு அதிமுக வழக்கறிஞர்கள் சார்பாக குருவித்துறை காசிநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
சோழவந்தான் பேருந்து நிலையத்தில் பேரூர் துணை செயலாளர் தியாகு தலைமையில் அதிமுகவினர் எம்ஜிஆரின் படத்திற்கு மரியாதை செய்தனர். மன்னாடிமங்கலத்தில் தெற்கு கிளை செயலாளர் ராஜபாண்டி மற்றும் கல்லாங்காடு கிளைச் செயலாளர் ராமு ஆகியோர் சார்பாக எம்ஜிஆர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதே போல் சோழவந்தான் தெற்கு தெருவில் மாணவரணி மாவட்ட செயலாளர் சிவா ஏற்பாட்டிலும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் ஒன்றிய செயலாளர் திரு வேடகம் சிபிஆர் மணி ஏற்பாட்டிலும் அதிமுகவினர் எம்ஜிஆரின் படத்திற்கு மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர் இதில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் கிளைக் கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



