• Tue. Oct 20th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சீரான சாலை அமைக்காததால் பொது மக்கள் நாத்து நடும் போராட்டம்..,

ByKalamegam Viswanathan

Oct 20, 2026

மதுரை மாநகராட்சி மேற்குமண்டலத்துக்கு உட்பட்ட 93-வது வார்டு அண்ணா நகர் மெயின் தெரு ஜோன்ஸ் புரம் முதல் தெருவில் சீரான ரோடு அமைக்கப்படவில்லை . மேலும் மழைதணணீர் மற்றும்கழிவுநீர் செல்லுவதற்கு ஏற்ப கழிவு நீர் வாய்க்கால் அமைக்கப்படவில்லை.

இது தொடர்பாக அப் பகுதி மக்கள்மாநகராட்சி உயர் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் தங்கள் பகுதிக்கு சீரான ரோடும், கழிவுநீர் வாய்க்காலும்மைக்கப்பட வேண்டும் என்றுகடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்காத நிலை இருந்து வருகிறது. கழை பெய்யும் பட்சத்தில் மட்டுமல்லாது சாரல் மழை பெய்ததால் கூட ஜோன்ஸ்புரம் முதல் தெருவில் மழை நீர் தேங்கி குளமாக உருவாகிறது.இந்த நிலையில் கடந்த 3 நாட்களாகபருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அதனால் ஜோன்ஸ் புரம் முதல் தெரு முழுவதுமாக சேறும் சகதியுமாக நிலை குலைந்து உள்ளது.

இதனையொட்டி அப்பகுதி பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் தெருவை கடந்துசென்று வருவதில் சக்கரங்கள் தடுமாற்றத்தால் கீழே விழுந்து காயம் அடைந்து ஆஸ்பத்திரிக்கு செல்லும் நிலையாக உள்ளது. இது தொடர்பாகசம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொது மக்கள் நேற்று தீரென்றுசேறும் சகதியுமான ரோட்டில் நாத்து நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் மதுரை மாநகராட்சி 93-வது வார்டு கவுன்சிலர் ரவிச்சந்திரன் பொதுமக்களிடம் கூறும்போது நானும் ஏற்கனவே ரோடு போட வேண்டும் என்று அதிகாரியிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால் அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாதது வருத்தமாக இருக்கிறது மழை காலமாக இருப்பதால் சேறும் சகதியுமான ரோட்டை சீரமைப்பதில்மாநகராட்சி கமிஷனர்நேரடியாக ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.