திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காசிவிசுவநாதர் கோவில் மற்றும் மலை மேல் குமரர் என்று அழைக்கப்படும் சுப்பிரமணிய சுவாமி தனி சன்னதி அமைந்து உள்ளது. இது தவிர என்றென்றும் வற்றாத் கங்கைக்கு நிகரான தீர்த்தகுளம் (சுனை) உள்ளது. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதாடிய தெய்வீக புலவர் நக்கீரர்பாவ விமோசனம் பெறுவதற்காக முருகப்பெருமான் தன் திருக்கரத்தில் உள்ள “வேல்”கொண்டு மலையின் பாறை பிளந்து காசிக்குநிகரான கங்கைதீர்த்தகுளத்தைஉருவாக்கியதாக புராண வரலாறு கூறுகிறது.

முருகப்பெருமான் “வேல்” கொண்டு மலை உச்சியில் மலைபாறையை பிளந்து தீர்த்த குளத்தை (சுனையை நினைவுப்படுத்தும் விதமாகவும், மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமை அன்று கிராம மக்கள் சார்பில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே 18 சித்தர்களில் ஒருவரான மச்ச முனிவர் வாழும்தீர்த்த குளத்தில் (சுனையில்) திடீரென்று மீன்கள் செத்து மிதக்கிறது. மேலும் தீர்த்த குளம் மாசு படிந்துள்ளது.அதை கண்டபக்தர்கள் மன வேதனை அடைந்துள்ளது போர்க்கால அடிப்படையில்செத்த மீன்களை அகற்றி மாசுவை போக்குவதில்கோவில் நிர்வாகம் முன்வர வேண்டும் என்றுபக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்




