• Tue. Oct 20th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ சூல கருப்பசாமி திருக்கோயிலில் கோயில் திருவிழாவில் பிரியாணி வழங்கல் ..,

ByKalamegam Viswanathan

Oct 20, 2026

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடியில் உள்ள ஸ்ரீ சூலக்கருப்பசாமி திருக்கோயிலில் 11 வது ஆண்டு திருவிழா நடைபெற்றது . இத் திருக்கோயில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கடைசி தினத்தன்று திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அது போல் இந்த ஆண்டு, ஸ்ரீ சூலக்கருப்பசாமியிடம் நேர்த்திக் கடனாக வேண்டிக் கொண்ட பக்தர்கள் அளித்த 10-க்கும் மேற்பட்டஆடுகள் மற்றும் 80-க்கும் மேற்பட்ட சேவல்களை வைத்து நள்ளிரவில் பிரியாணி சமைத்து அதிகாலையில் , ஸ்ரீசூலக் கருப்பசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்திய பின்பு, கள்ளிக்குடி, சிவரக்கோட்டை , அகத்தாபட்டி, ஓடைப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்த 2500 க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு பிரசாதமாக பிரியாணியை விழா குழுவினர் வழங்கினர்