தமிழகம் முழுவதும் நாளை ஆயுதபூஜை மற்றும் நாளை மறுநாள் விஜயதசமி பண்டிகையை மக்கள் கொண்டாட உள்ளனர். இதற்கிடையே பல்வேறு பகுதிகளில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சந்தை திட பகுதியில் உள்ள பூ சந்தையில் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் மல்லிகை பூ 1 கிலோ 1000ரூ விற்பனையான நிலையில் இன்று திடீரென உயர்ந்து 1 கிலோ மல்லிகை பூ 1600 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்று வருகிறது.

அதே போல் பிச்சி பூ 1கிலோ 900ரூ, முல்லை 1000ரூ, ரோஜா 200ரூ, பட்டன் ரோஜா 250ரூ, சென்டு பூ 150ரூ, செவ்வந்தி 200ரூ, சம்பங்கி 450ரூ, கோலிகொண்டை 300ரூபாயக்கும் விற்பனை நடைபெற்று வருகிறது.
மேலும் மழைக்காலம் என்பதால் மல்லிகை பூ வரத்து குறைந்துள்ளது.




