• Sun. Oct 18th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

நலத்திட்ட உதவிகள் மற்றும் “வெற்றிப் பயணத் திட்டம்” சிறப்பு பேருந்து சேவை தொடக்க விழா..,

ByAjmalkhan saleemraja

Oct 18, 2026

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பல்வேறு துறை சார்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் தமிழக அரசின் “வெற்றிப் பயணத் திட்டம்” சிறப்பு பேருந்துகள் தொடக்க விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு திட்டங்களைத் தொடங்கி வைத்தனர். முன்னதாக, தமிழக அரசின் “வெற்றிப் பயணத்” திட்டத்தின் கீழ் தேனி நகர் பகுதிகளில் இயக்கப்படக்கூடிய புதிய 6 சிறப்பு பேருந்துகளை அமைச்சர் நிர்மல் குமார் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பல்வேறு துறைகளின் சார்பில் 1960 பயனாளிகளுக்கு 26.45 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், 2.82 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புதிய அரசு பள்ளி கட்டிடங்களையும் அவர் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “நான் பள்ளி படித்த காலத்தில் இருந்தே தேனி மாவட்டத்தைப் பார்த்து வருகிறேன். கடந்த 20 வருடங்களாக தேனி மாவட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை; மக்களின் அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “தேனி ஒரு மாநில எல்லை மாவட்டம் என்பதால் கடந்த காலங்களில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது. நமது ஆட்சியில் தேனி மாவட்டம் முதன்மை மாவட்டமாக மாற்றப்பட்டு முழுமையாக வளர்ச்சியடையும். பெரியகுளத்தில் இருந்து முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் இருந்தவர்கள் கூட இப்பகுதியில் எந்த வளர்ச்சியையும் மேற்கொள்ளவில்லை” என்று ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரைப் குறிப்பிடாமல் விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “வைகை அணை சீரமைக்கப்பட்டுச் சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றப்படும். வைகை அணை கடந்த காலங்களில் இதுவரை தூர்வாரப்படவில்லை. தற்போது நமது ஆட்சியில் வைகை அணையைத் தூர்வார மத்திய அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறோம்; விரைவில் வைகை அணை தூர்வாரப்படும்” எனத் தெரிவித்தார்.