தேனி மாவட்டம் கூடலூர் வடக்கு காவல் நிலையத்தில் பெண் தலைமை காவலராக பணிபுரிந்தவர் முத்துமீனாட்சி. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர் 2003 ஆம் ஆண்டு பேட்ச்யில் காவலர் பயிற்சி பெற்று காவலரானவர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக உடல் நல குறைபாட்டின் காரணமாக முத்து மீனாட்சி உயிரிழந்தார்.

இதனை அடுத்து 2003 ஆம் ஆண்டு தமிழக முழுவதும் சுமார் 1300 பேர் இவருடன் பயிற்சி பெற்றவர்கள் .இவர்கள் தோழிகள் 2003 என்ற அமைப்பு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் இவர்கள் ஒன்றிணைந்து நட்பு வட்டமாக செயல் பட்டு வருகின்றனர்.
தோழிகள் 2003 ஆம் ஆண்டு பேட்சிங் சார்பாக உயிரிழந்த முத்துமீனாட்சியின் குடும்பத்தாருக்கு நிதி உதவி அளிக்கும் நிகழ்வு இன்று தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் முத்துமீனாட்சியின் திருவுருவப்படத்திற்கு அவரது தோழிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். அதனைத் தொடர்ந்து தோழிகள் 2003 பேட்சிங் உள்ள காவலர்கள் தங்களால் முடிந்த தொகையினை ஒன்று திரட்டி அந்த நிதியினை முத்து மீனாட்சி குழந்தைகளுக்கு அவர்களது எதிர்காலத்திற்கு தேவையான வைப்பு நிதி ரூபாய் 11 லட்ச ரூபாய் காண அஞ்சலக சேமிப்பு அட்டை அதற்கான ஆவணங்கள் மற்றும் ரொக்க தொகை இரண்டு லட்சம் ஆகியவற்றை மீனாட்சியின் தாயார் மற்றும் குழந்தைகள் கணவர் உள்ளிட்டோரிடம் தோழிகள் 2003 பேட்சிங் உள்ள பெண் காவல்துறை தோழிகள் வழங்கினார்.
அதற்கு முன்பாக முத்துமீனாட்சியுடன் அவர்கள் வாழ்ந்த நினைவுகளை கண்ணீர் மல்க நினைவு கூர்ந்தனர்.
இன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் தேனி மதுரை திண்டுக்கல் சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண் காவலர்கள் பங்கேற்றனர்.



