• Mon. Oct 12th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

500 பரதநாட்டிய கலைஞர்கள் மற்றும் மாணவிகள் ஆண்டாள் வேடமிட்டு நடனமாடி உலக சாதனை..,

ByK Kaliraj

Oct 12, 2026

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 3 மாநிலங்களில் இருந்து 500 பரதநாட்டிய கலைஞர்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஆண்டாள் வேடமிட்டு நடனமாடி உலக சாதனை நிகழ்த்தினர்.*

தஞ்சையை சேர்ந்த தனியார் பரதநாட்டிய பள்ளி சார்பில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர கொட்டகையில் சூடிக் கொடுத்த சுடர்கொடி என்ற தலைப்பில் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தின் பாரம்பரிய நாட்டியமான பரதத்தை அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திரா மற்றும் கர்நாடகவை சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் என 500க்கும் மேற்பட்டோர் ஆண்டாள் வேடமிட்டு கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை நடன இயக்குனர் கலா மாஸ்டர் தொடங்கி வைத்தார். இந்த உலக சாதனை நிகழ்ச்சிக்காக பிரத்யோகமாக உருவாக்கப்பட்ட சூடிக்கொடுத்த சுடர்கொடி என்று தொடங்கும் 13 நிமிட பாடலுக்கு நடன கலைஞர்கள் தொடர்ச்சியாக நடனமாடினர். இந்த சாதனை நிகழ்வு கலைத்தாய் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் நிறைவில் கலா மாஸ்டர் ஆண்டாள் கோயிலில் வழிபாடு நடத்தினார்.