• Fri. Nov 14th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டையில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்திற்கு தடை

புதுக்கோட்டை அருகே சிஐஎஸ்எஃப் வீரர்களின் துப்பாக்கிப் பயிற்சியின் போது தவறுதலாக குண்டு பாய்ந்து ஒரு சிறுவனுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை கீரனூர் சரக காவல் எல்லைக்குள்பட்ட பசுமலைப்பட்டி என்ற இடத்தில் தமிழ்நாடு காவல்துறையின் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அமைந்துள்ளது.

இந்த பயிற்சி மையத்தில், இன்று காவலர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது தவறுதலாக வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த புகழேந்தி(11) என்ற சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார். இதனை தொடர்ந்து புதுகோட்டை அரசுத் தலைமை மருத்துவமனையில் புகழேந்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறுவன் அழைத்துச் செல்லப்பட்டார்.மேலும் தஞ்சையில் சிறுவன் சிகிச்சை பெற்று வரும் நிலையில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் செயல்பட தடை விதித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.