• Wed. Oct 7th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

காவலர்களை தாக்கி மிளகாய்ப் பொடி தூவி தப்பிய கும்பல்” – 9 பேர் கைது !

BySeenu

Oct 7, 2026

​ கோவையின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து கொடூரக் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 9 பேர் கொண்ட பயங்கரக் கொள்ளைக் கும்பலைக் குனியமுத்தூர் போலீஸார் துரத்திப் பிடித்து அதிரடியாகக் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குனியமுத்தூர் பகுதியில் கல்லூரி மாணவர்களை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டிப் பணம் மற்றும் நகை பறிப்பில் இந்தக் கும்பல் ஈடுபட்டது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து அவர்களைத் பிடிக்க முயன்ற ரோந்து போலீஸார் மீது, காரில் இருந்தபடியே மிளகாய்ப் பொடியைத் தூவி விட்டு சினிமா பாணியில் தப்பிச் சென்றனர்.

​தேனியில் எஸ்.எஸ்.ஐ வீட்டில் 100 சவரன் சுருட்டல்:

கோவையில் இருந்து தப்பிய இக்கும்பல், தேனி மாவட்டத்திற்குச் சென்று அங்கே சிறப்புச் உதவி ஆய்வாளர் (SSI) ஒருவரின் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் தங்க நகைகளைச் சுருட்டிக் கொண்டு தப்பியது.

​அங்கு இருந்து தப்பியோடிய குற்றவாளிகள், போலீஸின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக டெல்லிக்குச் சென்று தலைமறைவாகினர்.

​விமானத்தில் வந்து கீழடியில் கொடூரக் கொலை!

டெல்லியில் சில மாதங்கள் பதுங்கி இருந்த இந்தக் கும்பல், கடந்த மாதம் விமானம் மூலமாக மீண்டும் தமிழகத்திற்குத் திரும்பியது.

தமிழகம் வந்த கையோடு சிவகங்கை மாவட்டம் கீழடி பகுதியில் நபர் ஒருவரைக் கொடூரமாகப் படுகொலை செய்து விட்டு மீண்டும் கோவைக்குத் தப்பி வந்தனர்.

தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த இக்கும்பலைக் பிடிக்கக் கோவை மாநகரக் காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

​செல்போன் எண்கள் மற்றும் கண்காணிப்புச் சாதனங்கள் மூலம் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்ட குனியமுத்தூர் போலீஸார், கோவையில் பதுங்கி இருந்த கும்பலின் தலைவன் உட்பட 9 பேரைக் கொண்ட கும்பலை வளைத்துப் பிடித்து அதிரடியாகக் கைது செய்தனர்.

​கைது செய்யப்பட்ட 9 பேரிடம் இருந்தும் கத்திகள், வாகனங்கள் மற்றும் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் அனைவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.