• Thu. Feb 26th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

வேலூர் அணைக்கட்டு சட்டமன்றத்தொகுதியில்.., நன்றி அறிவிப்பு மற்றும் பொது மக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி!

Byமதன்

Dec 30, 2021

வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி பென்னாத்தூர் பேரூராட்சி அல்லிவரம் பகுதியில் நன்றி அறிவிப்பு மற்றும் பொது மக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில்யில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்து கொண்டு தன்னை வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்று கொண்டார்

அவருடன் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு பேரூராட்சி செயலாளர் மு.குமார் ஒன்றிய செயலாளர்கள் சி.எல்.ஞானசேகரன் பி.வெங்கடேசன, என்.கஜேந்திரன் பகுதி செயலாளர் ஆர்.கே.ஐயப்பன் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.