• Tue. Oct 6th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில் டிரைவர் வெட்டி படுகொலை! அடுத்தடுத்து நடைபெறும் கொலை சம்பவங்கள்..,

ByKalamegam Viswanathan

Oct 6, 2026

மதுரை சோழவந்தான் முதலியார் கோட்டையை சேர்ந்த அழகர்சாமி மகன் சுந்தர் வயது 36 சோழவந்தான் காவல் நிலையம் எதிரில் உள்ள மட்டை கம்பெனியில் டிரைவராக வேலை செய்யும் இவருக்கு முத்துமீனா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று இரவு 9 மணி அளவில் சோழவந்தான் டாஸ்மாக் செல்லும் வழியில் மர்ம நபர்களால் முகத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை நடந்த இடத்திற்கு வந்த அவரது மனைவி முத்துமீனா அவரின் உடலை பார்த்து கதறி அழுத நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோழவந்தான் காவல்துறையினர் இறந்து கிடந்த சுந்தர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலைக்கு காரணம் முன் விரோதமா அல்லது மது போதையில் ஏற்பட்ட தகராறா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சோழவந்தான் அருகே தென்கரை பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்பு வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று செக்கானூரணி அருகே தேங்கள் பட்டி பகுதியில் டிரைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
தற்போது சோழவந்தான் பகுதியிலும் டிரைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட சுந்தருக்கு முத்துமினா என்ற மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளதாக கூறப்படும் நிலையில் கொடைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரணம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டாஸ்மாக் அருகே டிரைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன் அந்த பகுதி பொதுமக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது காவல்துறை தீவிர விசாரணை செய்து கொலையாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.