தமிழக முதல்வர் விஜய் இன்று, கோவை மாவட்டத்தில் இருந்து, திருப்பூர் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து பாதுகாப்பு காரணம் கருதி கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு காவல்துறையினர், பலத்த பாதுக்காப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரின் உடைமைகளையும், தீவிர பாதுகாப்பு பணிகளுடன் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதித்து வருகின்றனர்.

மேலும் விமான நிலையம் முகப்பு பகுதியில் காவல்துறையினர் விமான நிலையம் உள்ளே செல்லும் வாகனங்களையும் தணிக்கை செய்து அனைத்து வாகனங்களின் பதிவுகளையும் சேகரித்து என்னென்ன காரணத்திற்காக அவர்கள் விமான நிலையம் செல்கிறார்கள் என்று ஆய்வு செய்து வருகின்றனர். சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக கோவை வந்த தமிழக முதல்வர் விஜய், விமான நிலையத்தின் உள்பகுதியில் இருந்து பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் மூலமாக தாராபுரம் சென்றார். கோவை முதல் தாராபுரம் வரை சாலையில் சென்றால் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு என்பதற்காக செய்துள்ளனர்.
தாராபுரத்தில் முதல்வரின் ஹெலிகாப்டர் தரையிறங்க அங்கு ப்ரத்யேக ஹேலிபேடு அமைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அங்கிருந்து முதல்வருக்காக உருவாக்கப்பட்ட பிரத்தியேக வாகனத்தில் ஏறி நின்றபடி ரோட்ஷோ நிகழ்ச்சியில், அவர் பங்கேற்க்க இருக்கிறார். தாராபுரம் சாலையில் உள்ள மாருதி நகர் பகுதியில் இந்த ஹெலிகாப்டர் இறங்கும் தளம் அமைக்கப்பட்டுள்ளது இங்கிருந்து, உடுமலைப்பேட்டை சாலை சந்திப்பு உடுமலை காவல் நிலையம் சந்திப்பு அங்கிருந்து அலங்கியம் ஐந்து சாலை சந்திப்பு மீனாட்சிபுரம் சந்திப்பு குளத்துபாளையம்,
கரையூர், மூலனுார், வஞ்சியம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் ரோட் ஷோ செல்கிறார்.
இதற்காக சுமார் 3000-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த முறை அவர் வந்த பொழுது காவல்துறையினர் ஏற்படுத்தியிருந்த தடுப்பு அறன்களையும், மீறி இளைஞர்கள், முதல்வரின் வாகனத்தை நிறுத்த முற்பட்டனர். ஆனால் இந்த முறை அத்தகைய செயல் நடைபெற கூடாது என்பதற்காக, காவல் துறையினர் கூடுதல் கவனம் செலுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கோவை மாவட்டத்தில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள சிவப்பு மண்டலப் பகுதிகளுடன் கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட கொடிசியா, பீளமேடு, சித்ரா, நேரு நகர், ஹோப்ஸ் ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர், இருகூர், சின்னியம்பாளையம் ஆகிய பகுதிகள் மற்றும் கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட கரியாம்பாளையம் சந்திப்பு, நீலாம்பூர் புற காவல் நிலையம், சிந்தாமணிபுதூர் சந்திப்பு, சூலூர் ஜங்சன், சூலூர் புதிய பேருந்து நிலையம், காங்கேயம் பாளையம் சந்திப்பு, மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள், தற்காலிக சிவப்பு மண்டலப்பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் நேற்று 03ம் தேதி அதிகாலை 01.00 மணி முதல் நாளை, 05ம் தேதி, அதிகாலை 09.00 மணி வரையில் ஆளில்லா விமானங்கள் இயக்குவதற்கு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டு ஆளில்லா விமானங்கள் என்றழைக்கபடும் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி ஊர்திகள் பறப்பதற்கும் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இந்த பணிகளை காவல்துறையினர் மாநகர் முழுவதும் ரோந்து வாகனங்களில் சென்று சோதனை செய்து வருகின்றனர்.




